பொது செய்தி

இந்தியா

5 / சினி கடலை

Added : செப் 02, 2021
Share
Advertisement
போட்டோக்கள் வெளியீடுதுருவன் இயக்கும் முதல் திரைப்படம், 'பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா'வின், முதற்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் முடிவடைந்துள்ளது. இவர், இதற்கு முன், 'ஐராவத், தாரக்' திரைப்படத்தில், உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதில் சோனல் மாந்த்ரோ நாயகியாக நடிக்கிறார். கல்லுாரி மாணவி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். நம்மை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை மையமாக
 5 / சினி கடலை

போட்டோக்கள் வெளியீடு

துருவன் இயக்கும் முதல் திரைப்படம், 'பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா'வின், முதற்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் முடிவடைந்துள்ளது. இவர், இதற்கு முன், 'ஐராவத், தாரக்' திரைப்படத்தில், உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதில் சோனல் மாந்த்ரோ நாயகியாக நடிக்கிறார். கல்லுாரி மாணவி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். நம்மை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. படத்தின் போட்டோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மைசூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்குமாம்.

ஆனேகுட்டாவில் பூஜை

சூரி இயக்கிய, 'பாப்கார்ன் மங்கி டைகர்' திரைப்படத்தின் மூலம், கன்னட திரையுலகில் நுழைந்தவர் நடிகை சப்தமி கவுடா. தற்போது இவர், 'காந்தாரா' என்ற படத்துக்கு நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாக புதுமுக நடிகையருக்கு வித்தியாசமான கதை, கதாபாத்திரம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் சப்தமி கவுடாவுக்கு, அடுத்தடுத்து நல்ல வாய்ப்பு தேடி வருவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். குந்தாபுராவின் ஆனேகுட்டா விநாயகர் கோவிலில், படத்துக்கு பூஜை போடப்பட்டதாம்.

பல முறை தள்ளிவைப்பு

யோகி நடிக்கும், 'லங்கே' படத்தை, ஜூலை 19ல் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். கொரோனா விதிமுறையால், திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கை களை மட்டும் நிரப்ப அரசு அனுமதியளித்ததால், திரைக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 20ல் திரையிட நிர்ணயித்தனர். அப்போதும் திரைக்கு வரவில்லை. தற்போது செப்டம்பர் 10ல், திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இப்படத்தில் காவ்யா ஷெட்டி, எஸ்தர் நொரோன்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

புரிதல் இல்லாமல் பிரிதல்
நடிகை மான்விதா, 'ஹேபிலி மேரிட்' என்ற புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். கடந்த வாரமே படப்பிடிப்பு முடிந்துள்ளது. இது முழுக்க, முழுக்க குடும்ப கதையாம். இன்றைய தலைமுறையினர், காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்குள் புரிதல் இல்லாமல், சண்டை போட்டு பிரிகின்றனர். சாதாரண சண்டை எங்கு சென்று முடிகிறது என்பதை, படத்தில் காண்பித்துள்ளனர். இப்படத்தில் இசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இசையமைக்கும் பொறுப்பை நோபின் ஸ்கோப் ஏற்றுள்ளார். படத்தில் மான்விதா நடிப்பு, பேசப்படும் என எதிர்ப்பார்க்கிறார்.
மீண்டும் திரையிட திட்டம்
புதுமுக நடிகர் ஏகலவ்யா நடிக்கும், 'கலிவீரா' படம், நவம்பரில் மீண்டும் திரையிடப்படுகிறது. கொரோனா ஊரடங்கு தளர்த்தி, திரையரங்குகள் திறக்க வாய்ப்பு கிடைத்த பின், திரைக்கு வந்த முதல் படம் இதுவாகும். இப்படம் நன்றாக இருந்தும், எதிர்ப்பார்த்தபடி வசூலை குவிக்க வில்லை என, படக்குழுவினர் வருத்தமடைந்தனர். இப்படம் அதிகமான மக்களை சென்றடைய வில்லை. நவம்பரில் திரையரங்குகளில், 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப, அனுமதி கிடைக்கக்கூடும். எனவே அப்போது 'கலிவீரா' வை மீண்டும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மாறுபட்ட கதை

சாண்டல்வுட்டின் திறமையான நடிகைகளில் பாவனாவும் ஒருவர். இப்போதும் ஐந்தாறு படங்களை கையில் வைத்துள்ளார். கதை, கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். 'ருத்ரி' படத்தில் இவரது நடிப்புக்காக சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றுள்ளார்.தற்போது ஊரடங்கை மையமாக கொண்டு, கன்னடத்தில் தயாராகும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இது வழக்கமான கதையாக இல்லாமல், மாறுபட்ட கதையாக படமாக்கியுள்ளனர்.

சோஷியல் மீடியாவில் பரபரப்பு

நடிகர் தர்ஷனின், 'எஜமானா' திரைப்படம் மூலம் கன்னடத்துக்கு வந்த நடிகை தான்யா ஹோப், 'ஹோம் மினிஸ்டர்' உட்பட சில படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் இவருக்கு மவுசு உள்ளது. தான்யா, சோஷியல் மீடியாவில் எப்போதும் பரபரப்பாக இருப்பார்.சில நாட்களுக்கு முன் கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஏராளமான லைக்ஸ், கமென்ட்ஸ்குவிந்துள்ளதாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X