ஓடும் பிரமுகர்களை தடுப்பதே ம.ஜ.த.,வுக்கு தலைவலி

Added : செப் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடக எம்.எல்.சி., தேர்தல் நெருங்கும் நிலையில், சிதறும் தலைவர்களை பிடித்து வைப்பதே, ம.ஜ.த.,வுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.கர்நாடக மேலவையின் 25 ஆசிரியர்கள், பட்டதாரி தொகுதிகளுக்கு 2022ல் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்கு பா.ஜ., காங்கிரஸ் தயாராகி வருகின்றன.அந்தந்த கட்சிகளில் டிக்கெட் எதிர்ப்பார்க்கும் தலைவர்கள், இப்போதிருந்தே வாக்காளர்களை ஈர்க்கும்

பெங்களூரு:கர்நாடக எம்.எல்.சி., தேர்தல் நெருங்கும் நிலையில், சிதறும் தலைவர்களை பிடித்து வைப்பதே, ம.ஜ.த.,வுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

கர்நாடக மேலவையின் 25 ஆசிரியர்கள், பட்டதாரி தொகுதிகளுக்கு 2022ல் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்கு பா.ஜ., காங்கிரஸ் தயாராகி வருகின்றன.அந்தந்த கட்சிகளில் டிக்கெட் எதிர்ப்பார்க்கும் தலைவர்கள், இப்போதிருந்தே வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் ம.ஜ.த.,வின் சூழ்நிலை வேறு விதமாக உள்ளது. வேறு கட்சிகளுக்கு தாவ, தயாராக உள்ள தலைவர்களை, பிடித்து வைப்பதே அக்கட்சி மேலிடத்துக்கு, பெரும் தலைவலியாக உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ., அல்லது காங்கிரசுக்கு செல்ல, பல தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மைசூரு நகரின் செல்வாக்கு மிக்க தலைவர் ஜி.டி.தேவகவுடா, ம.ஜ.த.,விலிருந்து விலகி, காங்கிரசுக்கு செல்ல தயாராகி விட்டார். இவருடன் சேர்ந்து ஆதரவாளர்களும், இக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.துமகூரின் பிரபல ஒக்கலிகர் தலைவர் காந்தராஜும், காங்கிரஸ் தலைவர்களுடன் தென்படுகிறார். இவர் தன் அரசியல் எதிர்காலத்தை கருதி, ம.ஜ.த.,வை விட்டு விலகி, காங்கிரசுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக மாநில தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பரமேஸ்வர் ஆகியோரை, காந்தராஜ் சந்தித்து பேசியுள்ளார். இது போல, ம.ஜ.த., வலுவாக உள்ள பகுதிகளின் தலைவர்கள், தங்களின் அரசியல் நலனுக்காக, 2023 சட்டசபை தேர்தல் நேரத்தில், பா.ஜ., அல்லது காங்கிரசுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ம.ஜ.த.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல், மேலவை தேர்தல் நெருங்கும் நிலையில், தலைவர்கள் கட்சி தாவாமல் பார்த்துக்கொள்வது, ம.ஜ.த.,வுக்கு பெரும்பாடாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X