முட்டை புகார் போயே போச்சு!| Dinamalar

'முட்டை' புகார் போயே போச்சு!

Added : செப் 02, 2021
Share
வாரிசுக்காக வீடு கட்டுறாங்க!வாரிசுக்கு அரசியலில் இடம் கிடைக்க எல்லாருமே துடிக்கிறாங்க. இதுல மாண்டியா மேடமும் விதிவிலக்கல்ல.மாண்டியா தொகுதியில் எம்.பி., மேடம் குடியேற போறதா, தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிச்சாங்க. இப்போ, வீடு கட்ட பூமி பூஜையை நடத்தினாங்க. வீட்டைக் கட்டி முடிச்சு, அதில் குடியேறுவதோடு, மேடத்தோட தவப்புதல்வரை அசம்பிளிக்கு அனுப்ப திட்டம் போட்டிருக்காரு.

வாரிசுக்காக வீடு கட்டுறாங்க!

வாரிசுக்கு அரசியலில் இடம் கிடைக்க எல்லாருமே துடிக்கிறாங்க. இதுல மாண்டியா மேடமும் விதிவிலக்கல்ல.மாண்டியா தொகுதியில் எம்.பி., மேடம் குடியேற போறதா, தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிச்சாங்க. இப்போ, வீடு கட்ட பூமி பூஜையை நடத்தினாங்க. வீட்டைக் கட்டி முடிச்சு, அதில் குடியேறுவதோடு, மேடத்தோட தவப்புதல்வரை அசம்பிளிக்கு அனுப்ப திட்டம் போட்டிருக்காரு. ஆனால், மைந்தரோ, அந்த எண்ணமே இல்ல. எதுக்கு சும்மா வாய் கிளறி பாக்குறீங்கன்னு புன்முறுவல் காட்டுறாராம்.

'முட்டை' புகார் போயே போச்சு!
அரசியல் ஆட்டம் முடிந்து போயிடும்னு முட்டை ஊழல் மந்திரியை பற்றி பெருசா பேசிக்கிட்டாங்க. மினிஸ்டர் போஸ்ட் அவுட் ஆயிடுச்சின்னு பலரும் பேசினாங்க.ஆனால், டெல்லி பாலிடிக்சில் கணவரோடு இணைஞ்சி, மறுபடியும் தந்திரம் பண்ணி, மந்திரி பதவி வாங்கிட்டு பறந்து வந்துட்டாங்க.முட்டை ஊழலை பெரிசு படுத்தி புகார் செய்தவங்களும் மறந்து சைலன்ட் ஆகிட்டாங்க. மந்திரிக்கு முட்டை பேரம் பேச விடாதபடி துறை மாறி போச்சு.

கழுகு போல காத்திருப்பு!

அசம்பிளி தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்குது. இப்பவே, 123 தொகுதிக்கு புல்லுக்கட்டு கட்சி, வேட்பாளரை அறிவிக்கப் போறதா சொன்னாங்க.ரொம்போ அர்ஜென்ட் பண்றாங்கன்னு புல்லுக்கட்டு மாவட்ட தலைவருங்க பேசிக்கிறாங்க. 'மாஜி' சி.எம்., யாரை வேட்பாளரா அறிவிக்க இருக்கிறாரோ, அவங்கள தம் கட்சிக்கு இழுத்துக் கொள்ள பூக்காரங்களும், கை காரங்களும், கழுகு போல காத்திருக்காங்க.கிளியை வளர்த்து பூனைக்கு இரையாக்க போறாருன்னு புல்லுக்கட்டு தொண்டர்கள் சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க. புல்லுக்கட்டு தெறந்த வீடா போச்சு.

காக்கிகளுக்கு எதிரா கதர்க்காரர்!

கோலார் மாவட்டத்தில தனக்கு தான் அதிகமான பவர் இருப்பதா சீனிவாசப்பூர் அசம்பிளிக்காரருக்கு நெனனப்பு. அதெல்லாம் காவி காரங்க ஆட்சியில் எடுபடுமா. கதர்காரரை ஜெயிக்க விடுவாங்களா...காவி கண்ட்ரோலில் காக்கிகள் இருப்பதை மறந்து, காக்கிக்காரங்களோடு, கதர்காரர் 'லடாய்' செய்து முட்டி மோதி வராரு. ஆனாலும், ஆட்சி அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் தான் காக்கிகள் கம்பீரமா இருக்குறாங்க. இதனால் தொடர்ந்து அவருக்கு மூக்குடைப்பு ஏற்படுதாம். மழைக்கால கூட்டத் தொடரில், அவர், காக்கிகளுக்கு எதிராக வாதம் செய்ய சட்டத்தை புரட்டி வராராம்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X