சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நல்லதுக்கு இல்லை!

Added : செப் 02, 2021
Share
Advertisement
நல்லதுக்கு இல்லை!'தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி செய்தால் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படாதா; மூத்த அரசியல்வாதியான இவர் இப்படிச் செய்யலாமா...' என, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் பற்றி கொதிப்புடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை


அக்கம் பக்கம்


நல்லதுக்கு இல்லை!



'தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி செய்தால் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படாதா; மூத்த அரசியல்வாதியான இவர் இப்படிச் செய்யலாமா...' என, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் பற்றி கொதிப்புடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த தேர்தலில் பறிகொடுத்த முதல்வர் பதவியை இந்த தேர்தலில் மீட்பதற்காக சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறார்.
பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வரும் அவர், மற்றொரு முக்கியமான எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ், பா.ஜ., வுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாகவும் பேசி வருகிறார்.

ஆனால் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ், சமீபத்தில் லக்னோவில் பா.ஜ., மூத்த தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. இந்த விவகாரம் தான், சமாஜ்வாதி கட்சியினரை கோபப்பட வைத்துள்ளது. முலாயம் சிங் தரப்போ, 'சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றதைத் தான், ரகசிய சந்திப்பு என திரித்து பேசுகின்றனர்' என, நியாயப்படுத்துகிறது. 'ஆடு உறவு, குட்டி பகை என்ற கதையாக இருக்கிறதே; இதெல்லாம் நல்லதுக்கு இல்லை' என, முணு முணுக்கின்றனர், சமாஜ்வாதியில் உள்ள அகிலேஷ்

ஆதரவாளர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X