சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கோடநாடு எஸ்டேட் அதிகாரிக்கு காத்திருக்கும் 'ஆப்பு!'

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோடநாடு எஸ்டேட் அதிகாரிக்கு காத்திருக்கும் 'ஆப்பு!'''அ.தி.மு.க.,காரா பலன் அடைஞ்சுடக் கூடாதுங்கறதுல குறியா இருக்கான்னு புகார் சொல்றா ஓய்...'' என, நண்பர்கள் மத்தியில் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.''என்ன விஷயம் பா...'' என்றார், அன்வர்பாய்.''சேலம் மாவட்டத்துல, 200க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இருக்கு... இதுல, 10 வருஷமா அ.தி.மு.க.,வை


டீ கடை பெஞ்ச்


கோடநாடு எஸ்டேட் அதிகாரிக்கு காத்திருக்கும் 'ஆப்பு!'



''அ.தி.மு.க.,காரா பலன் அடைஞ்சுடக் கூடாதுங்கறதுல குறியா இருக்கான்னு புகார் சொல்றா ஓய்...'' என, நண்பர்கள் மத்தியில் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''என்ன விஷயம் பா...'' என்றார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டத்துல, 200க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இருக்கு... இதுல, 10 வருஷமா அ.தி.மு.க.,வை சேர்ந்தவா தான் தலைவர், துணை தலைவர், இயக்குனர் பதவிகள்ல இருந்தா ஓய்...

''இப்ப, தி.மு.க., ஆட்சியில, 5 சவரன் நகை கடன் தள்ளுபடிக்கு பட்டியல் தயாரிச்சுண்டு இருக்காளோல்லியோ... இதுல, கூட்டுறவு சங்க பதவியில இருந்தவாளின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கடன் தள்ளுபடி
கிடையாதுன்னு விதிமுறை வகுத்திருக்கா ஓய்...

''பதவியில இருந்தவா, நிஜமான விவசாயியா, ஏழையா இருந்தாலும், அவாளுக்கு கடன் தள்ளுபடி கிடையாதுன்னு ஆளுங்கட்சியினர் உத்தரவுப்படி, அதிகாரிகள் பட்டியல் தயாரிச்சுண்டு இருக்கான்னு அ.தி.மு.க.,வினர் புலம்பறா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.

''தொழிற்சங்கம் மேல பழியை போடுறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சென்னை துறைமுகத்துல பணியாற்றும் தொழிலாளர்களை, துறைமுகத்துல உள்ள அனைத்து நுழை வாயில்கள்லயும், கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிக்கு
அனுப்பியிருக்காங்க...

''அங்க வர்ற டிரைவர், கிளீனர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில மோதல் ஏற்பட்டு, அடிதடி எல்லாம் நடக்குதுங்க... அதனால, 'வாகனங்களை ஒழுங்குப்படுத்த, போலீஸ் துறை அல்லது தனியார் பாதுகாப்பு காவலாளிகளை நியமிக்கலாமே'ன்னு, நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கேட்டிருக்காங்க...

''அதுக்கு, 'சில தொழிற்சங்கங்கள் அனுமதியுடன் தான் இந்த உத்தரவை போட்டோம்'னு அதிகாரிகள் சொல்லியிருக்காங்க... ஆனா, எந்த தொழிற்சங்கம் இதுக்கு
ஆதரவு தெரிவிச்சு கையெழுத்து போட்டதுன்னு தெரிவிக்க மாட்டேங்கிறாங்க... இதனால, தொழிலாளர்கள் எல்லாம் குமுறல்ல இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''எஸ்டேட் அதிகாரிக்கு கண்டம் காத்துட்டு இருக்கு வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார்
அண்ணாச்சி.

''கோடநாடு எஸ்டேட் தகவலா ஓய்...'' என பட்டென கேட்டார், குப்பண்ணா.

''ஆமாம்... அங்க நடந்த கொலை, கொள்ளை வழக்குல, முக்கியமான மர வியாபாரியை சீக்கிரமே போலீசார் கைது செய்ய இருக்காவ... அந்த எஸ்டேட்டை பராமரிக்கும் அதிகாரியும், மர வியாபாரியும் சேர்ந்து பர்னிச்சர், இறால் பண்ணை தொழில் எல்லாம்
பண்ணுதாவ வே...

''எஸ்டேட் அதிகாரிக்கு கோவை, போத்தனுார்ல பங்களா, அவரது சொந்த ஊரான நன்னிலத்துல ஒரு பங்களான்னு மர வியாபாரி கட்டி தந்திருக்காரு... இவங்க ரெண்டு பேருக்கும் தெரியாம, எஸ்டேட்ல எதுவும் நடக்காதாம்... 'மர வியாபாரி சிக்குனா, அடுத்து அதிகாரிக்கு தான் ஆப்பு'ன்னு, போலீஸ் வட்டாரத்துல சொல்லுதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
''வாரும் நடராஜன்... உம்ம நண்பர் சஜீவன் சவுக்கியமா ஓய்...'' என, நண்பரிடம் குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-செப்-202115:38:16 IST Report Abuse
D.Ambujavalli அதிகாரி, மர வியாபாரி என்று சில்லறைகளை வளைத்து விட்டு, மூலவரை தொடாமலே கூட கேஸை மூடினாலும் வியப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X