பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 02, 2021
Share
Advertisement
செப்., 3, 1992விழுப்புரத்தில் 1916 அக்., 2ம் தேதி பிறந்தவர், ப.நீலகண்டன். இவர் எழுதிய நாடகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இவரின், நாம் இருவர் நாடகத்தை, ஏ.வி.எம்., நிறுவனம் படமாக தயாரித்து வெளியிட்டது. இதன் வழியே திரையுலகிற்குள் நுழைந்தவர், 1948ல், வேதாள உலகம் என்ற படத்திற்கு வசனம் எழுதினார். 1951ல், ஓர் இரவு படத்தில் இயக்குனராக பணியாற்றினார். இதை தொடர்ந்து தமிழ், கன்னட


இதே நாளில் அன்று


செப்., 3, 1992



விழுப்புரத்தில் 1916 அக்., 2ம் தேதி பிறந்தவர், ப.நீலகண்டன். இவர் எழுதிய நாடகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இவரின், நாம் இருவர் நாடகத்தை, ஏ.வி.எம்., நிறுவனம் படமாக தயாரித்து வெளியிட்டது. இதன் வழியே திரையுலகிற்குள் நுழைந்தவர், 1948ல், வேதாள உலகம் என்ற படத்திற்கு வசனம் எழுதினார். 1951ல், ஓர் இரவு படத்தில் இயக்குனராக பணியாற்றினார். இதை தொடர்ந்து தமிழ், கன்னட படங்களை இயக்கினார்.எம்.ஜி.ஆர்., நடிப்பில், மாட்டுக்கார வேலன், திருடாதே உட்பட 17 படங்களை இயக்கினார். இதனால், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் என அழைக்கப்பட்டார். 'ஏ.எல்.எஸ்., புரொடக் ஷன்ஸ்' நிறுவனம் மூலம் அம்பிகாபதி, திருடாதே போன்ற படங்களை தயாரித்தார். எம்.ஜி.ஆர்., தன் அமைச்சரவையில் இடம் அளிக்க முன்வந்தபோதும், அதை வேண்டாம் என மறுத்தார். சில நுால்கள் எழுதியுள்ளார். 1992, செப்., 3ல் தன் 76வது வயதில் இயற்கை எய்தினார்.
இயக்குனர் ப.நீலகண்டன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X