அரசியல் செய்தி

தமிழ்நாடு

டுவிட்டரில் திட்டு வாங்கும் கார்த்தி சிதம்பரம்: காரணம் இது தான்!

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., சசிகாந்த் செந்திலின் கருத்து ஒன்றை பதிவிட்டு அவரது பதவியை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருந்தனர். “எதற்கு ஒருங்கிணைப்பாளர் அவர்? ஒட்டுமொத்த கட்சிக்குமா? இது என்ன புதிய பதவியா?” என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்ப, கடுப்பாகி அவரை டுவிட்டரில் பலரும் திட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., சசிகாந்த் செந்திலின் கருத்து ஒன்றை பதிவிட்டு அவரது பதவியை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருந்தனர். “எதற்கு ஒருங்கிணைப்பாளர் அவர்? ஒட்டுமொத்த கட்சிக்குமா? இது என்ன புதிய பதவியா?” என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்ப, கடுப்பாகி அவரை டுவிட்டரில் பலரும் திட்டி வருகின்றனர்.



latest tamil news



காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் 2009 பேட்ச் ஐ.ஏ.எஸ்., ஆவார். கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். கடந்த 2019 செப்டம்பர் 6 அன்று மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு பல பொது மேடைகளில் மோடி அரசின் செயல்திட்டங்களை விமர்சித்து வந்தார். கடந்த 2020 நவம்பரில் காங்கிரஸில் இணைந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள், பிரச்சார உத்திகள் வகுப்பது, ராகுல் காந்தியின் பயணத் திட்ட பணிகள் போன்றவற்றில் பங்கு கொண்டிருந்தார்.

இவரை கடந்த ஜூலை மாதம் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவின் ஒப்புதலுடன் கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடத்துவது, சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது, இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற துணை அமைப்புகளுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளை இவர் மேற்கொள்வார் என அழகிரி கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் அவரது பதவியை குறிப்பிட்டு கட்சி போட்ட டுவீட்டில், “எதற்கு ஒருங்கிணைப்பாளர் அவர்? ஒட்டுமொத்த கட்சிக்குமா? இது என்ன புதிய பதவியா?” என்றெல்லாம் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்வியால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் அவரின் அணுகுமுறையை விமர்சித்து பதிலடி தந்து வருகின்றனர்.


latest tamil news



”இது தான் அண்ணாமலைக்கு பா.ஜ.க., தரும் முக்கியத்துவத்திற்கும், சசிக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதைக்கும் உள்ள வித்தியாசம்.” என ஒருவர் கூறியுள்ளார். “காங்கிரஸ் கட்சி நசநசப்பதற்கு கார்த்தி மாதிரியான ஆட்கள் தான் காரணம். இவரை களையெடுங்கள்” என வேலூர் சரவணன் என்பவர் குறிப்பிட்டுள்ளார். “காங்கிரஸ் ஏன் உருப்பட வாய்ப்பே இல்லை என்பதற்கு இந்த டுவீட்டே உதாரணம்.” என சூர்யா பார்ன் டூ வின் என்பவர் கூறியுள்ளார். ”தெருவில் இறங்கி இவர் ஏதாவது போராட்டம் செய்திருப்பாரா. ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஊர் ஊராக பிரசாரம் செய்யும் சசிகாந்தை நக்கல் அடிக்கிறார்.” என ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
03-செப்-202110:14:38 IST Report Abuse
abibabegum காங்கிரஸில் செயல் படாத தலைவிதி அழகிரி
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
03-செப்-202110:11:56 IST Report Abuse
abibabegum கார்த்திக் சிதம்பரம் மீது எந்த தப்பும் இல்லை அவனை ஓட்டுப் போட்டு ஜெய்க்கவச்ச மக்களை தான் எதை கொண்டு ...அடிக்க லாம்
Rate this:
Cancel
Murthy - CHENNAI,இந்தியா
03-செப்-202109:57:39 IST Report Abuse
Murthy “காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வலு விழந்ததுற்கு காரணம் கார்த்தி மாதிரியான ஆட்கள் தான் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X