பிரிவினைவாத தலைவர் கிலானி உடல் நல்லடக்கம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி, 91, நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், அவரது வீட்டருகே உள்ள மசூதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பை துவங்கியவர் சையத் அலி ஷா கிலானி. இவர், மூன்று முறை ஜம்மு - காஷ்மீர் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கபட்டார்.
 பிரிவினைவாத தலைவர் கிலானி உடல் நல்லடக்கம்

ஸ்ரீநகர்:ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி, 91, நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், அவரது வீட்டருகே உள்ள மசூதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பை துவங்கியவர் சையத் அலி ஷா கிலானி. இவர், மூன்று முறை ஜம்மு - காஷ்மீர் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கபட்டார். காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கக் கோரி போராடி வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த கிலானி, நேற்று முன்தினம் இரவு காலமானார்.
அவரது இறுதிச் சடங்கில் பலர் பங்கேற்கலாம் என்பதால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என யூனியன் பிரதேச நிர்வாகம் கருதியது. இதையடுத்து உடலை உடனடியாக நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு - காஷ்மீரில் 'இன்டர்நெட்' சேவைகள் முடக்கப் பட்டன. இதையடுத்து கிலானியின் உடல் அவரது வீட்டருகே உள்ள மசூதி வளாகத்தில் நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X