ஜம்மு - காஷ்மீர் அருகே பாக்., விமானப்படை தளம்| Dinamalar

ஜம்மு - காஷ்மீர் அருகே பாக்., விமானப்படை தளம்

Added : செப் 02, 2021
Share
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் அருகே இரண்டு விமானப்படை தளங்களை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீ., தொலைவில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு உட்பட்ட கோட்லி மற்றும் ராவல்கோட் ஆகிய இடங்களில் பாக்., விமானப்படை தளங்கள் செயல்பட்டு வந்தன. 7,000 ஏக்கர் நிலம்பல்வேறு காரணங்களினால் நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டு விமானப்படை

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் அருகே இரண்டு விமானப்படை தளங்களை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீ., தொலைவில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு உட்பட்ட கோட்லி மற்றும் ராவல்கோட் ஆகிய இடங்களில் பாக்., விமானப்படை தளங்கள் செயல்பட்டு வந்தன. 7,000 ஏக்கர் நிலம்பல்வேறு காரணங்களினால் நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டு விமானப்படை தளங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் அந்த இரு விமானப்படை தளங்களையும் பாக்., விமானப்படை மீண்டும் திறந்து உள்ளது.சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோதாபாத் விமானப்படை தளம் அருகே ராணுவ முகாம் பகுதியை, அந்நாட்டு ராணுவம் உருவாக்கி வருகிறது. இதற்காக அப்பகுதியில்,7,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் என்ற இடத்தில் 26 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய விமானப்படை தளத்தை அந்நாட்டு ராணுவம் ஏற்கனவே அமைத்துள்ளது.நாடு முழுதும் உள்ள விமானப்படை தளங்களில் 'எப் - 16' ரக போர் விமானங்களை பாக்., குவித்து வருகிறது.

ஷம்ஸி என்ற இடத்தில், விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வந்திறங்கி உள்ளன. அங்கு, தகவல் பரிமாற்றம் மற்றும் ரேடார் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. காஷ்மீர் எல்லைக்கு மிக அருகே விமானப் படை தளம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, நம் நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.


நடவடிக்கை

கடந்த 2019ல், பாக்.,கின் பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை நம் விமானப் படையினர் தரைமட்டமாக்கினர். அப்போது, பாக்., விமானப் படையினரால் உடனடியாக எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது போல மீண்டும் ஒரு சம்பவம் ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X