மைசூரு:நாகரஹொளேவின், 'ராஜிவ் தேசிய பூங்கா' பெயரை மாற்ற வேண்டுமென, பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
குடகு, மைசூரு மாவட்டங்களில் விரிவடைந்துள்ள, நாகரஹொளே தேசிய பூங்கா, இயற்கை எழில் மிகுந்துள்ள பகுதியாகும். இதை ரசிப்பதற்காகவே, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். கடந்த 1955ல் பூங்கா அமைக்கப்பட்ட போது, 258 சதுர கி.மீ., ஆக இருந்தது. அதன்பின் மைசூரு மாவட்டத்தின் பல பகுதிகள், பூங்காவில் சேர்ந்தது.
தற்போது பூங்கா 643.39 சதுர கி.மீ.,யாக விரிவடைந்துள்ளது. 1983ல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்காவின் பெயரை மாற்றும்படி ஆன்லைன் மூலமாக கையெழுத்து சேகரிக்கப்படுகிறது.குடகின் நவீன் மாதப்பா, வினய் காயபன்ட் ஆகியோர், கையெழுத்து சேகரிக்கின்றனர். இதுவரை 6,400 பேர் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகரஹொளே தேசிய பூங்காவின் பெயரை மாற்றும்படி, எம்.பி., பிரதாப் சிம்ஹாவும், மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:மைசூரின் நாகரஹொளேவின், ராஜிவ்காந்தி தேசிய பூங்கா பெயரை மாற்றி, 'பீல்ட் மார்ஷல் கரியப்பா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம்' என, பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE