பொது செய்தி

இந்தியா

சொத்து வரி வசூல் 9 சதவீதம் அதிகரிப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரு மாநகராட்சியின் நடப்பு நிதியாண்டில் சொத்து வரி வசூல் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடப்பாண்டுக்கான சொத்து வரி செலுத்துவதற்கு, ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.நடப்பாண்டுக்கான சொத்துவரி வசூலில் கடந்தாண்டை விட 9 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், இதே காலகட்டத்தில் 1,881 கோடி
சொத்து வரி வசூல் 9 சதவீதம் அதிகரிப்பு

பெங்களூரு:பெங்களூரு மாநகராட்சியின் நடப்பு நிதியாண்டில் சொத்து வரி வசூல் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடப்பாண்டுக்கான சொத்து வரி செலுத்துவதற்கு, ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

நடப்பாண்டுக்கான சொத்துவரி வசூலில் கடந்தாண்டை விட 9 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், இதே காலகட்டத்தில் 1,881 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் 2,052 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.மாநகராட்சியில் உள்ள எட்டு மண்டலங்களிலும் சொத்துவரி வசூல் அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக எலஹங்காவில் 24 சதவீதம்; குறைந்தபட்சமாக மஹாதேவபுராவில் 3 சதவீதமும் வசூலாகியுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா கூறியதாவது:அனைத்து மண்டலங்களிலும் சொத்துவரி செலுத்துவதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒரே தவணையில் வரி செலுத்துவதற்கு சலுகையும் வழங்கப்பட்டது. புதிதாக கட்டப்படும் கட்டடங்களும் வரி செலுத்துவதற்கான வரைமுறைக்குள் கொண்டு வரப்பட்டது. வரி செலுத்துவது தொடர்பான நோட்டீஸ் முன்பாகவே வழங்கப்பட்டது. மேலும், நடப்பாண்டில் வங்கி மூலமாக செலுத்துவோரை விட, ஆன்லைன் மூலம் செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X