பொது செய்தி

இந்தியா

செக்யூரிட்டிகளை நியமிப்பதில் எசசரிக்கை: போலீசார் அறிறுத்தல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு:வீடுகள், கட்டடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் பாதுகாப்புக்கு செக்யூரிட்டிகளை நியமிப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செக்யூரிட்டிகள் போல நடித்து, கொள்ளையடிக்கும் நேபாள கும்பல் பெங்களூரில் நுழைந்துள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.பாதுகாவலர்:நேபாளத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பெங்களூரின் பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

பெங்களூரு:வீடுகள், கட்டடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் பாதுகாப்புக்கு செக்யூரிட்டிகளை நியமிப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செக்யூரிட்டிகள் போல நடித்து, கொள்ளையடிக்கும் நேபாள கும்பல் பெங்களூரில் நுழைந்துள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

பாதுகாவலர்:நேபாளத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பெங்களூரின் பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர். செக்யூரிட்டி ஏஜன்சி அல்லது அறிமுகமானவர்கள் மூலம், தொழிலதிபர்களின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ரியல் எஸ்டேட் கட்டடங்கள், வங்கிகள் உட்பட பல இடங்களில் செக்யூரிட்டி எனப்படும் பாதுகாவலர்களாக பணியில் சேருகின்றனர்.


வீட்டினுள் நோட்டம்


நாளடைவில் உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறுகின்றனர். வீட்டுக்குள் நுழைந்து எந்த இடத்தில், என்னென்ன உள்ளது என்பதை நோட்டம் விடுகின்றனர்.அதன்பின் உரிமையாளர் வெளியூர் செல்லும் நேரத்தில், கண்காணிப்பு கேமராக்கள், அலாரம்களின் இணைப்பை துண்டித்து, கள்ளச்சாவி போட்டு உள்ளே நுழைந்து, தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடுகின்றனர்.

மொபைலை 'சுவிட்ச் ஆப்' செய்து விடுகின்றனர்.ஒருவேளை அந்த இடங்களில் நேபாள பிரஜை இருந்தால், அவருக்கு பணத்தாசை காண்பித்து, அந்த இடத்தை பற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வர். ஆடம்பர வாழ்க்கை தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களில் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் சுவரை குடைந்தோ, கள்ளச்சாவியை போட்டோ உள்ளே நுழைந்து, லட்சக்கணக்காண ரூபாய் ரொக்கம், தங்க நகைகளை திருடிக்கொண்டு, நேபாளத்துக்கு தப்பி விடுவர்.

ஆடம்பர வாழ்க்கை நடத்துவர். பணம் காலியான பின், மீண்டும் பெங்களூரு வந்து, செக்யூரிட்டியாக வேறு இடங்களில் பணியில் சேர்வர்.சமீபத்தில் வீடுகளில் திருடிய, நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயற்சித்த, 10க்கும் மேற்பட்ட நேபாள பிரஜைகளை, பானஸ்வாடி போலீசார் கைது செய்துள்ளனர்.இவர்களிடம் விசாரித்ததில், இவர்களை போல பல திருட்டு கும்பல் ஊடுருவியுள்ளது தெரிய வந்தது. எனவே, செக்யூரிட்டி பணிக்கு ஆட்களை நியமிக்கும் முன், கவனமாக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.


புதிய விதிமுறை

இது தொடர்பாக, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நான்கைந்து ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் செக்யூரிட்டிகளால் நடத்தப்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்தது.இதை தீவிரமாக கருதிய, பெங்களூரு நகரின் அன்றைய கமிஷனர், புதிய விதிமுறையை கொண்டு வந்தார். செக்யூரிட்டி ஏஜென்சிகள், பணிக்கு நியமிக்கு முன், நபர்களின் ஆதார் கார்டு, தேர்தல் அடையாள அட்டை உட்பட மற்ற தகவல்களை பெற வேண்டும்.

அந்த நபரை பற்றி அந்தந்த போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து தடையில்லா கடிதம் பெற வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால் அந்த விதிமுறை சரியாக கடைப் பிடிக்கப்படவில்லை.நேபாளிகளை பற்றி அனைத்து விபரங்களை உறுதி செய்து கொள்ளாமல் அவர்களை செக்யூரிட்டிகளாக நியமிக்கின்றனர்.

அவர்களை தொழிலதிபர்களின் வீடுகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பல இடங்களுக்கு பாதுகாப்புக்கு அனுப்புகின்றனர். இனியாவது செக்யூரிட்டி ஏஜென்சிகள், பணிக்கு ஆட்களை நியமிக்கும் முன், அவர்களை பற்றிய ஆவணங்களை பெற வேண்டும். முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X