அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

Added : செப் 02, 2021
Share
பெங்களூரு:'கர்நாடகாவில், அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யும். செப்டம்பர் 5 வரை, பெங்களுரு உட்பட, மாநிலத்தின் பல மாவட்டங்களில், கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கடலோரம், மலைப்பகுதி, தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முதல், செப்டம்பர் 5 வரை,

பெங்களூரு:'கர்நாடகாவில், அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யும். செப்டம்பர் 5 வரை, பெங்களுரு உட்பட, மாநிலத்தின் பல மாவட்டங்களில், கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கடலோரம், மலைப்பகுதி, தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முதல், செப்டம்பர் 5 வரை, பெங்களூரு, உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, ஷிவமொகா, ஹாசன், குடகு, ராம்நகர், துமகூரு, கோலார், சாம்ராஜ்நகர், சிக்கபல்லாபூர், பெங்களூரு நகர், ரூரல் மாவட்டங்களில், மழை நீடிக்கும்.

பெங்களூரில் நேற்று முன் தினம் மழையின் அளவு அதிகரித்துள்ளது. ஜூலையில் மழை அதிகமாக பெய்திருந்தது. அதன்பின் படிப்படியாக குறைந்தது. தற்போது வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், மீண்டும் மழை துவங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X