பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதப்படை வளாகத்துக்கு மோப்ப நாய் பிரிவு மாற்றம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு ஆயுதப்படை வளாகத்துக்கு, துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவு அலுவலகமும், முகாமும் செயல்பட்டு வந்தது. கயல், பவானி, வீரா, ஜெர்ரி ஆகிய நான்கு மோப்ப நாய்கள் உள்ளன. இதில் வீரா, ஜெர்ரி போன்றவை கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கவ்வி

ஈரோடு: ஈரோடு ஆயுதப்படை வளாகத்துக்கு, துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவு அலுவலகமும், முகாமும் செயல்பட்டு வந்தது. கயல், பவானி, வீரா, ஜெர்ரி ஆகிய நான்கு மோப்ப நாய்கள் உள்ளன. இதில் வீரா, ஜெர்ரி போன்றவை கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கவ்வி பிடிக்கவும், பவானி, கயல் போன்றவை வெடி பொருட்கள் சோதனைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மோப்பநாய் படை பிரிவு அலுவலகம், முகாம் கட்டடம் போதிய இட வசதி இல்லாமல் உள்ளது. ஈரோடு ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில், 62 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குளிர்சாதன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய் படை பிரிவு அலுவலகம், நேற்று முன்தினம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. நாய்கள் அனைத்தும் போலீஸ் வேனில் ஏற்றி, புதிய முகாம் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. நேற்று முதல் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில், துப்பறியும் மோப்ப நாய் பிரிவு அலுவலகமும், முகாமும் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X