வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
பெருந்துறை: பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த ஆக., 15ல், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 20ல், பெரியவிளாமலை ஊராட்சிக்குட்பட்ட, கண்ணாவேலம்பாளையம் அருகே, வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. ஈரோடு

பெருந்துறை: பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த ஆக., 15ல், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 20ல், பெரியவிளாமலை ஊராட்சிக்குட்பட்ட, கண்ணாவேலம்பாளையம் அருகே, வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ., பிரேமா, பெருந்துறை தாசில்தார் கார்த்திக், ஐ.ஆர்.டி. பொறியியல் கல்லூரி கட்டடத்துறை பேராசிரியர் சித்ரா, மின்வாரிய பொறியாளர் சேனை, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சிவகுமார், அருள், தாமோதரன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கண்ணன், கவிதா ஆகியோர், கண்ணாவேலம்பாளையம் அருகே, நடைபெறும் வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X