சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: மொடக்குறிச்சி, காரைகாட்டு வலசை சேர்ந்தவர் இளங்கோ. இவர் மனைவி மகேஸ்வரி, 25, நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு வளைகாப்பு நடத்துவது தொடர்பாக மகேஸ்வரியின் தந்தை, மருமகன் இளங்கோ மற்றும் அவரது வீட்டாரிடம் தகவல் கூறி சென்றார். இதுதொடர்பாக இளங்கோவுக்கும், மகேஸ்வரியின் தந்தைக்கும் இடையே கடந்த, 30ல் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இளங்கோ தன் மாமனாரை தகாத வார்த்தையால்

ஈரோடு: மொடக்குறிச்சி, காரைகாட்டு வலசை சேர்ந்தவர் இளங்கோ. இவர் மனைவி மகேஸ்வரி, 25, நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு வளைகாப்பு நடத்துவது தொடர்பாக மகேஸ்வரியின் தந்தை, மருமகன் இளங்கோ மற்றும் அவரது வீட்டாரிடம் தகவல் கூறி சென்றார். இதுதொடர்பாக இளங்கோவுக்கும், மகேஸ்வரியின் தந்தைக்கும் இடையே கடந்த, 30ல் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இளங்கோ தன் மாமனாரை தகாத வார்த்தையால் திட்டினார். தட்டி கேட்ட மனைவியை இளங்கோ கன்னத்தில் அடித்தார். அதன்பின் மகேஸ்வரி, அவரது தந்தை வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அப்போது மனைவியை இளங்கோ, வீட்டுக்குள் அழைத்தார். அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்து அங்கிருந்த சிறு கல்லை தூக்கி மனைவி மீது வீசி எறிந்துள்ளார். இதில் மகேஸ்வரியின் கால் முட்டியில் பட்டு காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் மகேஸ்வரி சேர்க்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார், இளங்கோ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X