சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரும்பு கடைகளில் திருட்டு: வாலிபர் உட்பட இருவர் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் பழைய இரும்பு கடைகளில் பித்தளை, செம்பு பொருட்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, பெரியசேமூர் மணிக்காரர் வீதியை சேர்ந்த இலியாஸ் செரீப், 37, பி.பெ.அக்ரஹாரம் காமராஜ் நகரில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த, 8 ல் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் பார்த்தபோது, கடையில் இருந்த, 40 கிலோ பித்தளை, 45 கிலோ செம்பு, 90 கிலோ மின் ஒயர்கள் என, ஒரு லட்சம்

ஈரோடு: ஈரோட்டில் பழைய இரும்பு கடைகளில் பித்தளை, செம்பு பொருட்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு, பெரியசேமூர் மணிக்காரர் வீதியை சேர்ந்த இலியாஸ் செரீப், 37, பி.பெ.அக்ரஹாரம் காமராஜ் நகரில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த, 8 ல் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் பார்த்தபோது, கடையில் இருந்த, 40 கிலோ பித்தளை, 45 கிலோ செம்பு, 90 கிலோ மின் ஒயர்கள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதேபோல், ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் குளம் பிரிவு ரோட்டில், கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த காஜா மொகைதீன், 27, நடத்தி வரும் பழைய இரும்புக்கடையில் ஆக., 16ல் மர்மநபர்கள், 12 கிலோ பித்தளை, 25 கிலோ செம்பு என, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ்.ஐ., கனகராஜ் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சரியாக பதிலளித்ததால், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இடையன்காட்டு வலசு வாரணவாசி வீதியை சேர்ந்த அலாவுதீன், 19, முத்தம்பாளையம் பாரதி நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இருவரும் இரும்பு கடைகளில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X