செய்திகளுக்கு மதச் சாயம் பூசுவதாக உச்ச நீதிமன்றம் வேதனை

Updated : செப் 04, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (7+ 22)
Share
Advertisement
புதுடில்லி:'ஊடகங்களில் ஒரு பிரிவினர் செய்திகளுக்கு மதச் சாயம் பூசுவது, நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்துகிறது' என, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நீதிபதிகள், நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், சில சமூக வலைதளங்கள் தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வருவதற்கும், உச்ச நீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் கடந்தாண்டு மார்ச்சில் அதிக
செய்திகள், மதச் சாயம் ,உச்ச நீதிமன்றம் வேதனை!  ஊடகம், சமூக வலைதளங்ள், ஆட்சேபம்

புதுடில்லி:'ஊடகங்களில் ஒரு பிரிவினர் செய்திகளுக்கு மதச் சாயம் பூசுவது, நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்துகிறது' என, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நீதிபதிகள், நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், சில சமூக வலைதளங்கள் தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வருவதற்கும், உச்ச நீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் கடந்தாண்டு மார்ச்சில் அதிக அளவில் இருந்தது. அப்போது, டில்லியை அடுத்துள்ள நிஜாமுதீனில் உள்ள மசூதியில், தப்லிகி ஜமாத் அமைப்பினர் மாநாடு நடந்தது.இதனால், கொரோனா பரவல் அதிகரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.


இந்நிலையில், 'திட்டமிட்டு சில ஊடகங்கள் மதச் சாயம் பூசும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன; பொய் செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன. 'இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஜமாயத் உலேமா ஹிந்த் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


செவி சாய்ப்பதில்லை



இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஏ.எஸ்.போபண்ணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணை வந்தது.அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:மத ரீதியில் மட்டுமல்லாமல், ஊடகங்களில் திட்டமிட்டு சில பொய் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. சமூக வலைதளங்கள், இணைய செய்தி நிறுவனங்களிலும் இது போன்று பொய் செய்திகள் அதிக அளவில் வெளியிடப்படுகின்றன.

பத்திரிகை, 'டிவி' போன்ற ஊடகங்களைக் கட்டுப்படுத்த சில சட்டங்களும், அமைப்பும் உள்ளன. சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் தான், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.இந்த சட்டத்தை எதிர்த்து, பல மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி, இந்த வழக்குடன் இணைந்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அமர்வு உத்தரவிட்டதாவது: தகவல் தொழில்நுட்ப சட்டத்தை எதிர்க்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து, ஆறு வாரங்களுக்குப் பின் விசாரிக்கப்படும்.தற்போது நம் நாட்டில் உள்ள மிகப் பெரிய பிரச்னை, அனைத்தையும் சில குறிப்பிட்ட ஊடகங்கள் மத ரீதியில் பார்க்கின்றன.

இது, நம் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இதை தடுக்க, மத்திய அரசு ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டுள்ளதா? நீதிபதிகள், நீதிமன்றம் குறித்தும் பொய் செய்திகளை சமூக வலைதளங்கள் வெளியிடுகின்றன. அவை, சில குறிப்பிட்ட 'அதிகாரமிக்கவர்களின் குரலை' மட்டுமே கேட்கின்றன.'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைதளமும், சாதாரண மக்களின் கருத்துகளை பிரதிபலிப்பதாக இல்லை; அவர்களுடைய குறைகளுக்கும் செவி சாய்ப்பதுஇல்லை.




பொய் செய்திகள்



இந்த தளங்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும், பொறுப்புணர்ச்சியும் இல்லை.நீதிபதிகள் குறித்தும், நீதிமன்றங்கள் குறித்தும் பொய் தகவல்களை வெளியிடுகின்றனர். கேட்டால், கருத்து சுதந்திரம் என்கின்றனர். 'யுடியூப் சேனல்'களை யார் வேண்டுமானாலும் துவக்கலாம்; என்ன வேண்டுமானாலும் அதில் பதிவிடலாம் என்ற நிலை உள்ளது. இந்த சேனல்களை பார்த்தாலே, பொய் செய்திகளை எந்த அளவுக்கு பரப்புகின்றனர் என்பது தெரியும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7+ 22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
03-செப்-202117:12:23 IST Report Abuse
NicoleThomson இந்த பூசல் வேலை தமிழக ஊடக மாபியாக்களுக்கு தான் பொருந்தும்
Rate this:
Cancel
03-செப்-202114:43:32 IST Report Abuse
அப்புசாமி //ஒரு பிரிவினர் மதச்சாயம் பூசுகின்றனர்// அந்த ஒரு பிரிவினர் யார்னு சொல்ல யாருக்கும் தெகிரியம் கிடையாது. என்னைக்கேட்டால் ஒவ்வொரு பிரிவுக்காரனும் ப்ரஷ்ஷோட நிக்குறான். மதச்சாயம் பூச...
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
03-செப்-202113:16:58 IST Report Abuse
Nakkeeran மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதை சொன்னாலும் அது கருத்து சுதந்திரம் என பல நீதி மன்றங்கள் கருத்து தெரிவித்திருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X