90 வயது 'மாஜி' அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

Added : செப் 02, 2021
Share
Advertisement
டோக்கியோ:ஜப்பானில் 2019ல் கார் விபத்து ஏற்படுத்தி, 3 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் உயிரிழக்க காரணமாக இருந்த, 90 வயதான முன்னாள் மூத்த அரசு அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கிழக்காசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் கோஸோ இஸுகா, 90. இவர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்ற ஓய்வு

டோக்கியோ:ஜப்பானில் 2019ல் கார் விபத்து ஏற்படுத்தி, 3 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் உயிரிழக்க காரணமாக இருந்த, 90 வயதான முன்னாள் மூத்த அரசு அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிழக்காசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் கோஸோ இஸுகா, 90. இவர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்ற ஓய்வு பெற்றார்.இவர் 2019ல் டோக்கியோ நகரில் கார் ஓட்டி சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதினார்.

இந்த விபத்தில், 3 வயது சிறுமி மற்றும் அவரது தாய் உயிரிழந்தனர். ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.ஜப்பானில் பெரும்பாலான கார் விபத்துகள் வயதான ஓட்டுனர்களால் ஏற்படுவதை அடுத்து, மூத்த குடிமக்கள் தானாக முன்வந்து ஓட்டுனர் உரிமத்தை அரசிடம் ஒப்படைக்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.முன்னாள் அரசு அதிகாரி இஸுகாவை போலீசார் கைது செய்யவில்லை. சொந்த செல்வாக்கை பயன்படுத்தி அவர் தப்பிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இயந்திர கோளாறு காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக இஸுகா தரப்பில் வாதிடப்பட்டது. விபத்துக்கு முன் அவர் 'பிரேக்' பயன்படுத்த வில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே கவனக்குறைவினால் விபத்து ஏற்படுத்திய இஸுகாவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து, டோக்கியோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X