பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை சாகுபடி அதிகரிப்பு: கரூரில் விற்பனை தொடக்கம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் மழை காரணமாக நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை தொடங்கிய நிலையில் கரூரில் விற்பனை துவங்கியுள்ளது.தமிழகத்தில் மழையை நம்பி மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுறது. கடந்த, மே, ஜூன் மாதங்களில் கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் நிலக்கடலையை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தனர். கரூர், தான்தோன்றிமலை,

கரூர்: கரூர் மாவட்டத்தில் மழை காரணமாக நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை தொடங்கிய நிலையில் கரூரில் விற்பனை துவங்கியுள்ளது.


தமிழகத்தில் மழையை நம்பி மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுறது. கடந்த, மே, ஜூன் மாதங்களில் கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் நிலக்கடலையை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தனர். கரூர், தான்தோன்றிமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய யூனியன் பகுதிளில், 15 ஆயிரம் ஆயிரம் ஏக்கர் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக, நிலக்கடலையை எண்ணெய் ஆலைக்காக ஏஜன்ட்கள் நேரிடையாக சென்று கொள்முதல் செய்வர். நடப்பாண்டில் மாநிலம் முழுவதும், நிலக்கடலை நல்ல விளைச்சல் உள்ளதால், விவசாயிகளே நேரிடையாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இதனால், கரூர் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், கிராம சந்தைகள் மற்றும் தெருவோர பகுதிகளில் மண் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் ஆலைக்கான ஏஜன்ட்கள் நிலக்கடலை கேட்டு அதிகம் பேர் வரவில்லை. ஒரு சிலர் வந்தாலும், ஒரு படி, 25 முதல், 30 ரூபாய் வரை, பொதுமக்களிடம் நேரிடையாக விற்கப்படுகிறது. அதிகளவில் நிலம் வைத்துள்ளவர்களிடம் ஏஜன்ட்கள் நிலக்கடலையை கொள்முதல் செய்து கொள்கின்றனர். இதனால், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறிய விவசாயிகள், மக்களிடம் நேரிடையாக நிலக்கடலையை விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X