ஆகஸ்டில் 70 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆகஸ்டில் 70 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனை

Added : செப் 02, 2021
Share
சென்னை:ஆகஸ்ட் மாதத்தில் 70 லட்சம் பெட்டி மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு 5,330 மது கடைகள் உள்ளன. அவற்றில் தினமும் சராசரியாக 67 ஆயிரம் பெட்டி பீர் வகைகளும்; 1.60 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாகின்றன; இவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய்.வார விடுமுறை, ஆங்கில புத்தாண்டு போன்ற விசேஷ விடுமுறை நாட்களில் மது விற்பனை அதிகரிக்கும். பொதுவாக,

சென்னை:ஆகஸ்ட் மாதத்தில் 70 லட்சம் பெட்டி மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு 5,330 மது கடைகள் உள்ளன. அவற்றில் தினமும் சராசரியாக 67 ஆயிரம் பெட்டி பீர் வகைகளும்; 1.60 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாகின்றன; இவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய்.வார விடுமுறை, ஆங்கில புத்தாண்டு போன்ற விசேஷ விடுமுறை நாட்களில் மது விற்பனை அதிகரிக்கும்.

பொதுவாக, கோடைக் காலத்தில், பீர் வகைகளும்; மழைக் காலங்களில் மது வகைகளும் அதிகம் விற்பனையாகும்.தேர்தல் காரணமாக மார்ச்சில், பீர் விற்பனை 34 லட்சம் பெட்டிகளாகவும்; மது விற்பனை 53 லட்சம் பெட்டிகளாகவும் அதிகரித்தது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, ஏப்ரலில் மது விற்பனையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், முழு ஊரடங்கால் மே 10 முதல் மதுக்கடை கள் மூடப்பட்டன. இதனால், அம்மாதங்களில் மது விற்பனை பாதித்தது. ஜூன் 14ல் வைரஸ் பரவல் குறைந்த மாவட்டங்களில், மது கடைகள் திறக்கப்பட்டன.

பின், அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டன.ஜூலையில் இருந்து மது விற்பனை இயல்பான அளவில் உள்ளது. அம்மாதம் 51 லட்சம் பெட்டி மது வகைகளும்; 21 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின. சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆக., 15ம் தேதி, மது கடைகளுக்கு விடுமுறை.இதனால், அம்மாதம் பீர் 20 லட்சம்; மது வகைகள் 50 லட்சம் என, மொத்தம் 70 லட்சம் பெட்டிகள் விற்பனை யாகி உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X