நுண்ணீர் பாசன திட்டம்: 3,850 ஹெக்டேரில் அமைக்க இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன திட்டம்: 3,850 ஹெக்டேரில் அமைக்க இலக்கு

Added : செப் 02, 2021
Share
நாமக்கல்: 'பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் நடப்பாண்டில், 3,850 ஹெக்டேர் பரப்பளவுக்கு, 32 கோடி ரூபாய் மதிப்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்ட மாவட்ட இயக்கக குழு கூட்டம் நடந்தது. கலெக்டர்

நாமக்கல்: 'பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் நடப்பாண்டில், 3,850 ஹெக்டேர் பரப்பளவுக்கு, 32 கோடி ரூபாய் மதிப்பில், நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்ட மாவட்ட இயக்கக குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது: பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், 3,850 ஹெக்டேர் பரப்பளவுக்கு, 32 கோடி ரூபாய் மதிப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும், நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண் செயல்பாடு திட்டத்தின் கீழ், ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பைப் லைன் மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைக்க, 6.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விபரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குனர் சேரலாதனை, 96296 62329 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார். தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X