பொது செய்தி

தமிழ்நாடு

'உதயம்' இணையதளத்தில் 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:மத்திய அரசின், 'உதயம்' இணையதளத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 4.01 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துஉள்ளன.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வகைப்படுத்தலுக்கான அளவுகோல்களை, 2020 ஜூலை 1 முதல் மத்திய அரசு திருத்தியமைத்தது.இயந்திரங்கள், உபகரணங்களில்

சென்னை:மத்திய அரசின், 'உதயம்' இணையதளத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 4.01 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துஉள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வகைப்படுத்தலுக்கான அளவுகோல்களை, 2020 ஜூலை 1 முதல் மத்திய அரசு திருத்தியமைத்தது.

இயந்திரங்கள், உபகரணங்களில் முதலீடு, 1கோடி ரூபாய்க்கு மிகாமல், விற்றுமுதல், 5 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், அது, குறு நிறுவனம்.முதலீடு 10 கோடி ரூபாய்க்கு மிகாமல், விற்றுமுதல் 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், அது சிறு நிறுவனம். முதலீடு, 50 கோடி ரூபாய்க்கு மிகாமல், விற்றுமுதல் 250 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் அது நடுத்தர நிறுவனம்.இதுபோன்ற நிறுவனத்தை, மத்திய அரசின் உதயம் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

இதன்படி தமிழகத்தில், 2020 ஜூலை 1 முதல், 2021 ஜூலை 31 வரை, நான்கு லட்சத்து 1,319 தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.இதன் வாயிலாக, 53 ஆயிரத்து 801 கோடி ரூபாய் முதலீடும், 41 லட்சத்து 69 ஆயிரத்து 352 பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகம், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான, உதயம் பதிவு செய்த, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X