கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி அளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி அளிப்பு

Added : செப் 02, 2021
Share
நாமக்கல்: அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலால் மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட துவங்கின. அதில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர்

நாமக்கல்: அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலால் மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட துவங்கின. அதில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மையத்தில், 300 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கல்லுரி முதல்வர் முருகன், செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தடுப்பூசி முகாம் நடந்தது. அதேபோல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்ததால், அந்த கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் அக்கல்லூரி இன்னும் ஒரு சில நாட்களில் செயல்படும் என கல்லூரி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X