பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

Added : செப் 02, 2021
Share
நாமக்கல்: 'ஈக்களை கட்டுப்படுத்த கோழிப்பண்ணைகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: கடந்த வார வானிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 93.2 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவானது. அடுத்த

நாமக்கல்: 'ஈக்களை கட்டுப்படுத்த கோழிப்பண்ணைகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: கடந்த வார வானிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 93.2 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவானது. அடுத்த இரண்டு நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான முதல் மிதமான மழை பல இடங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம், 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம், 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு, 8 கி.மீ என்றளவில் வீசும். சிறப்பு ஆலோசனை: பொதுவாக மழைக் காலங்களில், மழையும் இடையிடையே வெயிலும் நிலவக்கூடும். இந்த சூழல் ஈக்களின் பெருக்கத்திற்கு மிகவும் உகந்தவையாக இருக்கும். அதனால் ஈக்கள் வெகுவாக பெருகி கோழிப்பண்ணைகளில் வரும் மாதங்களில் அதிக தொல்லையை ஏற்படுத்தும். ஈக்களை கட்டுப்படுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X