பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பழகுநர் பயிற்சி: 14ல் நேர்காணல் துவக்கம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில் தொழில் பழகுநர் பயிற்சி நேர் காணல் வரும், 14ல் துவங்குகிறது. இதுகுறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன், சர்வேயர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், இன்ஸ்ட்ரூமென்ட்

நாமக்கல்: நாமக்கல்லில் தொழில் பழகுநர் பயிற்சி நேர் காணல் வரும், 14ல் துவங்குகிறது. இதுகுறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன், சர்வேயர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் (சிவில்) முடித்தவர்களுக்கு நேர்காணல், வரும், 14 முதல், 17 வரை, காலை, 10:30 முதல், மதியம், 2:00 மணி வரை, நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், மின்பகிர்மான வட்ட மத்திய அலுவலகம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நடக்கிறது. தகுதியுள்ள நபர்கள் கல்வி, சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, ஆதார் கார்டு, தேசிய தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். பயிற்சியின் போது மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X