பொது செய்தி

இந்தியா

காஷ்மீரை குறிவைக்கும் அல் - குவைதா: ஐ.எஸ்.ஐ., சதி அம்பலம்

Updated : செப் 04, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :'காஷ்மீர் உட்பட இஸ்லாமிய நிலங்களை மீட்க, சர்வதேச அளவில் 'ஜிகாத்' நடத்த வேண்டும் என, சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - குவைதா கூறியுள்ளதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உள்ளது' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் சமீபத்தில் முழுமையாக வெளியேறின. இதையடுத்து தலிபான் பயங்கர
காஷ்மீர்,  அல் - குவைதா ஐ.எஸ்.ஐ.,, சதி அம்பலம்

புதுடில்லி :'காஷ்மீர் உட்பட இஸ்லாமிய நிலங்களை மீட்க, சர்வதேச அளவில் 'ஜிகாத்' நடத்த வேண்டும் என, சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - குவைதா கூறியுள்ளதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உள்ளது' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் சமீபத்தில் முழுமையாக வெளியேறின. இதையடுத்து தலிபான் பயங்கர வாதிகளின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - குவைதா வெளியிட்ட அறிக்கையில், 'உலகில் அடுத்தவர்கள் ஆதிக்கத்தில் உள்ள இஸ்லாமிய நிலங்களை மீட்க ஜிகாத் எனப்படும் புனிதப் போர் நடத்த வேண்டும்' என கூறியிருந்தது. இஸ்லாமிய நிலங்கள் என குறிப்பிட்டிருந்த பகுதிகளில், நம் நாட்டின் ஜம்மு - காஷ்மீரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் முஸ்லிம்கள் கடும் சித்ரவதைகளை அனுபவித்து வரும் சீனாவின் செசன்யா, ஜின்ஜியாங் மாகாணங்கள் பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் அல் - குவைதாவின் அறிக்கை பற்றி வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தலிபான்கள் கையில் ஆப்கன் மீண்டும் சிக்கிஉள்ளது, சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. அல் - குவைதாவின் அறிக்கையை அலட்சியப்படுத்த முடியாது. இது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்.அந்த அறிக்கையில் ஜம்மு - காஷ்மீர் பற்றி குறிப்பிட்டுள்ள அல் குவைதா, முஸ்லிம்கள் கடும் சித்ரவதைகளை அனுபவித்து வரும் சீனாவின் செசன்யா, ஜின்ஜியாங் மாகாணங்கள் பற்றி குறிப்பிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல் - குவைதா பயங்கரவாதிகள் பலருக்கும் பாகிஸ்தான் தான் அடைக்கலம் கொடுத்துஉள்ளது. அந்த அமைப்பின் தலைவர் ஜவாஜிரி, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் தான் உள்ளார்.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், நிதிஉதவிக்காக சீனாவிடம் கையேந்தி நிற்கிறது. அதனால் தான் அல் - குவைதாவின் ஜிகாத் அறிக்கையில் ஜம்மு - காஷ்மீர் சேர்க்கப்பட்டு, சீனாவின் மாகாணங்கள் சேர்க்கப்படவில்லை. இதன் பின்னணியில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
03-செப்-202117:30:49 IST Report Abuse
DVRR காஷ்மீர் எப்படி இஸ்லாமிய நிலம் அது ஹிந்து மன்னர் ஆண்ட நிலம் Gulab Singh-16 March 1846-20 February 1856 Ranbir Singh-20 February 1856-12 September 1885 Pratap Singh-12 September 1885-23 September 1925 Hari Singh-23 September 1925-17 November 1952
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
03-செப்-202110:17:36 IST Report Abuse
Rasheel இவனுக எங்க இருந்தாலும் அழிவு மட்டும் தான் இருக்கும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-செப்-202110:08:24 IST Report Abuse
duruvasar முதலில் உள்நாட்டு தீவிரவாத குழுக்களை முழுமையாக ஒழித்தால் வெளிநாட்டு சக்திகளை எளிதில் வென்றுவிடலாம்.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
03-செப்-202117:33:50 IST Report Abuse
DVRRஉள்நாட்டு தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தர இந்த கருத்து பகுதியிலே இவ்வளவு பேர் இருக்கும் போது இந்த பரந்த இந்தியாவில் கேட்கவா வேண்டும்????ஆகவே இதற்கு ஒரே வழி "தவறு கண்டேன் சுட்டேன்" சட்டம் ஒன்றே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X