அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
அதியமான்கோட்டை: பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளியை தூய்மை படுத்துதல்,

அதியமான்கோட்டை: பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளியை தூய்மை படுத்துதல், சானிடைசர் மற்றும் முக கவசம் பயன்படுத்துதல் குறித்து, பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்டம் முழுவதும், 225 அரசு பள்ளிகள், ஆறு அரசு உதவி பெறும் பள்ளிகள், 122 தனியார் பள்ளிகள் என, மாவட்டம் முழுவதும், 353 பள்ளிகள் திறக்கப்பட்டன. இவற்றில், சுழற்சி முறையில் இடவசதிகளை பொறுத்து, ஒருசில பள்ளிகளில் மட்டும், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் நடத்த அனுதிமக்கப்பட்டுள்ளன. இவை முறையாக பின்பற்ற வேண்டி, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி அரசு பள்ளிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், சி.இ.ஓ., கணேசமூர்த்தி, நல்லம்பள்ளி பி.டி.ஓ., ஷகிலா, தாசில்தார் செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X