சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒதுக்கி வைத்த விவகாரம் கலெக்டருக்கு உத்தரவு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:சீர்காழி அருகே, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக, மயிலாடுதுறை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ்மூவக்கரையைச் சேர்ந்த மீனவர் ஜெயகுமார். இவர், தன் சகோதரர்கள் ஆறு பேருடன் சேர்ந்து மூன்றாண்டுகளுக்கு முன் அப்பகுதி மாரியம்மன் கோவிலுக்கு

சென்னை:சீர்காழி அருகே, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக, மயிலாடுதுறை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ்மூவக்கரையைச் சேர்ந்த மீனவர் ஜெயகுமார். இவர், தன் சகோதரர்கள் ஆறு பேருடன் சேர்ந்து மூன்றாண்டுகளுக்கு முன் அப்பகுதி மாரியம்மன் கோவிலுக்கு வெண்கல நிலைப்படியை செய்து, அதில் உபயதாரர்கள் என, தங்களின் பெயர்களை பொறித்து காணிக்கையாக அளித்தார்.

இந்நிலையில், நிலைப்படியில் பெயரை பொறித்ததால், கீழ்மூவக்கரை கிராம பொறுப்பாளர்கள், ஜெயகுமார் மற்றும் அவரது சகோதரர்கள் ஆறு பேர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.அவர்களுடன் கிராம மக்கள் பேசக்கூடாது; பொது குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது; அவர்களின் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் விளையாடவும், பேசவும் கூடாது என்றும் தடை விதித்தனர்.

இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர், தங்கள் மீதுள்ள தடையை நீக்கக் கோரி சீர்காழி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இந்தச் சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய தலைவர் பாஸ்கரன், இது தொடர்பாக, மயிலாடுதுறை கலெக்டர் ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X