பொது செய்தி

தமிழ்நாடு

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற தீர்மானம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மத்திய அரசு, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில், தமிழகம் தழுவிய மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இ.கம்யூ., சார்பில் நேற்று காலை மக்கள் நாடாளுமன்றம் நடந்தது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சுபத்ரா தேசியக்கொடியை ஏற்றினார். சபாநாயகராக முனியன் தேர்வு

கிருஷ்ணகிரி: மத்திய அரசு, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில், தமிழகம் தழுவிய மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இ.கம்யூ., சார்பில் நேற்று காலை மக்கள் நாடாளுமன்றம் நடந்தது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சுபத்ரா தேசியக்கொடியை ஏற்றினார். சபாநாயகராக முனியன் தேர்வு செய்யப்பட்டார். நகர தலைவர் உபேத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றிய செயலாளர் சிவராஜ், மூன்று வேளாண் சட்டங்களினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து விளக்கமளித்தார். மேலும், ரயில்வே, வங்கி, காப்பீடு, ராணுவ தொழிற்சாலை ஆகியவற்றை தனியார் மயமாக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மின்சாரத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது. அரசியல் சாசனம் வழங்கி, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை உடைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பேசினார். பின், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X