பொது செய்தி

தமிழ்நாடு

சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு; போராட்டம் தற்காலிக நிறுத்தம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரியில், சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, நாளை நடக்கவிருந்த போராட்டத்தை விவசாயிகள் ஒத்தி வைத்தனர்.சூளகிரியில், மூன்றாவது சிப்காட் அமைக்க, 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, மருதாண்டப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி வருவாய் கிராமங்களில், 1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த, விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில்,

ஓசூர்: சூளகிரியில், சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, நாளை நடக்கவிருந்த போராட்டத்தை விவசாயிகள் ஒத்தி வைத்தனர்.


சூளகிரியில், மூன்றாவது சிப்காட் அமைக்க, 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, மருதாண்டப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி வருவாய் கிராமங்களில், 1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த, விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், நல்லகான கொத்தப்பள்ளி, குண்டு குறுக்கி, கானலட்டி, கோனேரிப்பள்ளி ஆகிய கிராமங்களில், விவசாயம் செய்து வரும் நிலங்களை கையப்படுத்த முயற்சி செய்வதாக கூறி, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓசூர் கெலவரப்பள்ளி அணை இடது வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களையும் கையகப்படுத்த முயற்சிப்பதாக கூறி, மாவட்ட கலெக்டர் வரை விவசாயிகள் மனு வழங்கினர். மேலும் கடந்த, 29ல், கோனேரிப்பள்ளியில் விவசாயிகள் கூட்டம் நடத்தி, நாளை போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நல்ல முடிவை எடுப்பதாக கூறியுள்ளதால், நாளை (செப்.,3) நடக்கவிருந்த போராட்டத்தை, தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் நேற்று தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X