கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'இந்தியன் - 2' பட பிரச்னை சங்கருடன் லைகா பேச்சு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் -- 2 படப் பிரச்னை தொடர்பாக, இயக்குனர் சங்கரும், லைகா நிறுவனமும் பேச்சு நடத்துவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கமல் நடிப்பில் இந்தியன் -- 2 படம் தயாராகி வருகிறது. படத்தை சங்கர் இயக்குகிறார். படத் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட

சென்னை:நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் -- 2 படப் பிரச்னை தொடர்பாக, இயக்குனர் சங்கரும், லைகா நிறுவனமும் பேச்சு நடத்துவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

கமல் நடிப்பில் இந்தியன் -- 2 படம் தயாராகி வருகிறது. படத்தை சங்கர் இயக்குகிறார். படத் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படப் பிடிப்பு முடியவில்லை.இதையடுத்து, இந்தியன் - 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை கோரி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குனர் சங்கரிடம் பேச்சு நடத்தி தீர்வு காணும் முயற்சி நடப்பதால், விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரினார். அதைத் தொடர்ந்து, விசாரணையை நான்கு வாரங்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X