அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிமென்ட் விலை கட்டுப்படுத்தப்படும்':அமைச்சர் தங்கம் தென்னரசு

Added : செப் 02, 2021
Share
Advertisement
பா.ம.க., - அருள்: அனைவருக்கும் ஒரே லட்சியம், தகுதிக்கேற்ப வீடு கட்டுவது தான். கட்டுமானத்திற்கு சிமென்ட் முக்கியம். சிமென்ட் விலை உயர்வால், தற்போது வீட்டை பழுது பார்க்கக் கூட வழியில்லை. கட்டுமான பாதிப்பால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.அண்டை மாநிலங்களில் 350 ரூபாய்க்கு விற்கும் சிமென்ட் மூட்டை, தமிழகத்தில் 490 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு காரணம், ஆலை அதிபர்கள்

பா.ம.க., - அருள்:

அனைவருக்கும் ஒரே லட்சியம், தகுதிக்கேற்ப வீடு கட்டுவது தான். கட்டுமானத்திற்கு சிமென்ட் முக்கியம். சிமென்ட் விலை உயர்வால், தற்போது வீட்டை பழுது பார்க்கக் கூட வழியில்லை. கட்டுமான பாதிப்பால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.

அண்டை மாநிலங்களில் 350 ரூபாய்க்கு விற்கும் சிமென்ட் மூட்டை, தமிழகத்தில் 490 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு காரணம், ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து, தினசரி விலையை உயர்த்துகின்றனர். அரசு சிமென்ட் ஆலையில் உற்பத்திக்கு எவ்வளவு செலவாகிறது எனக் கணக்கிட்டு, அதில் 25 சதவீதம் லாபம் மற்றும் வரி சேர்த்து விலை நிர்ணயிக்க வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

சிமென்ட் விலையை பொறுத்தவரை, இந்த ஆண்டு துவக்கத்தில் 420 ரூபாயாக இருந்தது. ஜூனில் 490 ரூபாயாக உயர்ந்தது. விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டார்.ஜூன் 16ல் சிமென்ட் ஆலை அதிபர்களை அழைத்து விலையை குறைக்க கோரினோம். அதன்பின் விலை குறைக்கப்பட்டு, தற்போது, முதல்ரக சிமென்ட் மூட்டை 420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசு சிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அரியலுாரில் புதிய அலகு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 17 லட்சம் டன்னாக உள்ள சிமென்ட் உற்பத்தியை, வரும் ஆண்டில் 18.68 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 'வலிமை' என்ற பெயரில், புதிய சிமென்ட் பிராண்டை முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். அது விற்பனைக்கு வரும்போது, விலை குறையும். தற்போது, அரசு தொடர் கண்காணிப்பில், விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X