பல்வேறு உதவித்தொகை பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு உதவித்தொகை பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 02, 2021
Share
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு, 18 - 60 வயதுக்கு உட்பட்ட இஸ்லாமியர், பள்ளிவாசல், தர்கா, மதரஸா, முஸ்லீம் அனாதை இல்லம் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோர், சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் உலமாக்கள், இதர பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். உறுப்பினர் குழந்தைகளுக்கு, 10ம்

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு, 18 - 60 வயதுக்கு உட்பட்ட இஸ்லாமியர், பள்ளிவாசல், தர்கா, மதரஸா, முஸ்லீம் அனாதை இல்லம் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோர், சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் உலமாக்கள், இதர பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். உறுப்பினர் குழந்தைகளுக்கு, 10ம் வகுப்பு முதல், முதுகலை, தொழிற்கல்வி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி செலவு தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. நல வாரியத்தில் பதிவு செய்ய ,http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கலெக்டர் அலுவலக, அறை எண்: 110ல் விண்ணப்பத்தை பெறலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X