பொது செய்தி

தமிழ்நாடு

வீடு ஒதுக்கியதில் முறைகேடு? பாதிக்கப்பட்ட 25 பேர் புகார்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி அடுத்த பெரிய கொல்லப்பட்டி, காந்தி நகர் மக்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அய்யம்பெருமாம்பட்டியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதில் தலா, 400 சதுரடி வீதம் மனைபட்டா உருவாக்கி, அதை, வீடு, நிலம் இல்லாத அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த, 170 பயனாளிக்கு வழங்கப்பட்டன. அந்த இடத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி அடுத்த பெரிய கொல்லப்பட்டி, காந்தி நகர் மக்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அய்யம்பெருமாம்பட்டியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதில் தலா, 400 சதுரடி வீதம் மனைபட்டா உருவாக்கி, அதை, வீடு, நிலம் இல்லாத அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த, 170 பயனாளிக்கு வழங்கப்பட்டன. அந்த இடத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டி மீண்டும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களில், மனை வழங்கிய, 25 பேருக்கு மட்டும் வீடு ஒதுக்கவில்லை. முறைகேடு செய்து வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதால், தற்போது வீடின்றி அவதிப்படுகிறோம். விசாரித்து, எங்கள் மனையில் கட்டப்பட்ட வீடுகளை எங்களுக்கே ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறினர். சேலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஜாகீர் ஹூசைன் கூறுகையில், ''2006 - 07ல் வீடு ஒதுக்கீடு செய்து வழங்கி, 14 ஆண்டு முடிந்துவிட்டது. தற்போது மக்களை திசைதிருப்பி, வேண்டுமென்றே புகார் அளித்து பிரச்னை செய்கின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X