பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் எல்.ஐ.சி., அருகே நகராட்சிக்கு சொந்தமான, ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சிறுமுகை சாலை அருகே, எல்.ஐ.சி., அலுவலகம் பின்புறம், 1982ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மனைகள் பிரிக்கப்பட்டன. இதில் குழந்தைகள் விளையாடும் இடம், பொது உபயோகத்துக்கு இடம் என, நகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, ஷெட் அமைத்து, பழைய இரும்பு கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு தெரியவந்ததை அடுத்து, நகராட்சி கமிஷனர் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து வந்தனர்.

நேற்று நகராட்சி கமிஷனர் வினோத், பொறியாளர் கவிதா, நகரமைப்பு அலுவலர் மீனாட்சி ஆகியோர் முன்னிலையில், நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் ராஜன், முரளி, சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், ஆரோக்கியசாமி, மணிகண்டன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.5 கோடி மதிப்பிலான, 92 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. முள்வேலி அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X