நகராட்சியாக்க வேண்டாம்... விட்ருங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியாக்க வேண்டாம்... விட்ருங்க!

Added : செப் 02, 2021
Share
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கணியூர் ஊராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள கருமத்தம்பட்டியுடன், கணியூர் ஊராட்சியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கணியூர் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம்

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கணியூர் ஊராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள கருமத்தம்பட்டியுடன், கணியூர் ஊராட்சியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கணியூர் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்க விருப்பம் இல்லை என, அனைவரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இதையடுத்து , கணியூர் ஊராட்சியில் அவசரக்கூட்டம் நேற்று முன்தினம் தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்தது. அதில், நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மான விபரம்:கணியூர் ஊராட்சி, 1958ம் ஆண்டு முதல் பாரம்பரியமாக செயல்படுகிறது. 14 குக்கிராமங்களை கொண்டது. 70 சதவீத பரப்பில் விவசாயம் நடக்கிறது. நகராட்சியுடன் இணைத்தால், விவசாயிகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். வரியினங்கள் உயர்ந்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் பசுமை வீடுகள், விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கல் உள்ளிட்ட திட்டங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். 100 வேலை உறுதி திட்டத்தால், சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் மேற்கொள்ளும் விவசாயம் சார்ந்த பணிகள் பாதிக்கப்படும். தற்போது, மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பின் கீழ், மக்கள் பிரதிநிதிகள், 16 பேர் உள்ளனர். நகராட்சியாக்கினால், பிரதிநிதிகள் மக்களுக்கு அடிப்படை பணிகள் செய்ய இயலாத நிலை ஏற்படும்.தரம் உயர்த்த வேண்டுமானால், முதல் படியாக கிராமப்புறங்கள் அதிகம் உள்ளதால், பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, கணியூர் ஊராட்சியை கருமத்தம்பட்டியுடன் இணைக்க எதிர்ப் புதெரிவிக்கப்படுகிறது.தலைவர் வேலுசாமி மற்றும் உறுப்பினர்கள் கூறுகையில், 'கருமத்தம்பட்டியுடன் கணியூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதன் விபரங்களை கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X