சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவரிங் செயின் பறிப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
அன்னுார்:நடந்து சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர்கள் கவரிங் செயினை பறித்து சென்றனர்.அன்னுார் - கோவை சாலையை சேர்ந்தவர் சுசிலா, 70. இவர் நேற்று முன்தினம் மாலை, அன்னுார் குடியிருப்பு பின்புறம் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரில் ஒருவர், சுசிலாவின் கழுத்தில் இருந்த இரண்டு செயின்களை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர்.

அன்னுார்:நடந்து சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர்கள் கவரிங் செயினை பறித்து சென்றனர்.அன்னுார் - கோவை சாலையை சேர்ந்தவர் சுசிலா, 70. இவர் நேற்று முன்தினம் மாலை, அன்னுார் குடியிருப்பு பின்புறம் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரில் ஒருவர், சுசிலாவின் கழுத்தில் இருந்த இரண்டு செயின்களை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர். அப்போது இரண்டு செயின்களில் ஒன்று கீழே விழுந்து விட்டது.மர்ம நபர்கள் செயினை பறித்த போது, சாலையில் விழுந்த சுசீலாவின் முகம் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தங்கச் செயின் கிடைத்து விட்டது. மர்ம நபர்கள் பறித்துச் சென்றது கவரிங் செயின் என தெரிவித்தார்.போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X