சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு எதிராக விஷம பிரசாரம் :போதகர் சிறையிலடைப்பு

Updated : செப் 04, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோவை:கோவையில், விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக சிறப்பு ஜெப யாத்திரை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்து, மத மோதலை துாண்டிய கிறிஸ்துவ போதகர் டேவிட்டை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை அருகே தடாகம் ரோடு, செயின்ட் பால்ஸ் பள்ளி மற்றும் பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரி தலைவராக இருப்பவர் போதகர் டேவிட். இவர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எதிராக, போட்டி
விநாயகர் சதுர்த்தி, விஷம பிரசாரம் :போதகர் சிறை,

கோவை:கோவையில், விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக சிறப்பு ஜெப யாத்திரை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்து, மத மோதலை துாண்டிய கிறிஸ்துவ போதகர் டேவிட்டை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அருகே தடாகம் ரோடு, செயின்ட் பால்ஸ் பள்ளி மற்றும் பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரி தலைவராக இருப்பவர் போதகர் டேவிட். இவர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எதிராக, போட்டி ஜெபக்கூட்டம் நடத்த அழைப்பு விடுத்து, மத மோதல்களை உருவாக்கும் வகையில் வெளியிட்ட நோட்டீஸ்சர்ச்சையானது.அதில், 'கடந்த மூன்று ஆண்டுகளாக, கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாம் சிறப்பு ஜெப யாத்திரை நடத்தினோம். இதனால், யாரும் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது; சிலைகளின் அளவு இவ்வளவு தான் இருக்க வேண்டும்' என, கோவை கலெக்டர் கட்டுப்பாடுகளை விதித்தார்.'விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இது, நம் ஜெபயாத்திரைகளின் விளைவால் தான் நடந்தது. அதேபோல், இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாளில் ஜெபக்கூட்டம் நடத்தலாம்' என, விஷம பிரசாரம் செய்திருந்தார்.

இது தொடர்பாக கோவை கவுண்டம்பாளையம் வி.ஏ.ஓ., மணிகண்டன், உதவியாளர் முருகன் ஆகியோர், துடியலுார் போலீசில் புகார் அளித்தனர். துடியலுார் போலீசார் விசாரித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதையடுத்து, போதகர் டேவிட்டை, நேற்று போலீசார் தடாகம் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கைது செய்தனர். துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். பின், கோவை மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் பிரபு உத்தரவிட்டார். தொடர்ந்து ஈரோடு மாவட்டம், கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.தனியே... தன்னந்தனியே...விஷம பிரசாரத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவ போதகரை போலீசார் வீட்டுக்கு சென்று கைது செய்தபோதும், தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தபோதும், அவருக்கு துணையாகவோ, பரிந்து பேசவோ யாரும் வரவில்லை.அமைதியாக இருக்கும் மக்கள் இடையே மத உணர்வை துாண்டி, மோதல்களை உருவாக்க முயன்ற போதகரை அவரை சார்ந்தவர்களும், சபை நிர்வாகிகளும், மத அமைப்பினரும் புறக்கணித்ததை காண முடிந்தது.


3 பிரிவுகளில் வழக்குபோதகர் டேவிட் மீது பதியப்பட்ட வழக்குகள்:இந்திய தண்டனை சட்டம், 153 ஏ (1) (ஏ): பேச்சாலோ, எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத, இன, மொழி, ஜாதி, சமயம் சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் துாண்டிவிட முயற்சி செய்வது. பிரிவு 504: ஒருவர் வெகுண்டு எழுவதால், பொது அமைதியை குலைக்க நேரிடும் என்று தெரிந்தும் அல்லது அவர் ஏதாவது குற்றம் புரிய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் செயல்படுதல்.பிரிவு 505 (2): வேறுபட்ட மதங்கள், ஜாதிகள், அமைப்புகள், மொழி, இன, பிராந்திய உணர்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உணர்ச்சிகளை துாண்டிவிட்டு, அவர்களுக்கு இடையே விரோதம், வெறுப்பு, கெட்ட எண்ணங்களை துாண்டி, வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வதந்தி அல்லது பீதி தரும் தகவலை பரப்புவது. இந்த மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
03-செப்-202119:13:29 IST Report Abuse
J.Isaac இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற நீங்க, சத்யம் டிவி தாக்கப்பட்டதை பற்றி வாயே திறக்கவில்லையே ஏன்? தாக்கிய அந்த பைத்தியம், இந்து அமைப்பை சார்ந்தவனோ?
Rate this:
Cancel
jay - toronto,கனடா
03-செப்-202118:28:41 IST Report Abuse
jay ஆ ண்ணிய மத குள்ளநரி
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
03-செப்-202114:35:54 IST Report Abuse
ram பாவாடைகள் எல்லாம் ஒரு மார்க்கமாக அலைகிறார்கள், போதிய பணம் வெளிநாடுகளில் இருந்து வராத சோகம், மேலும் அவர்கள் பிட்சை எடுக்கும் நாடுகளில் இருக்கும் மக்கள் ஹிந்து மதத்திற்க்கு எவர் தூண்டுதல் இல்லாமல் மாறி வருவதால் இவர்கள் கோபம் பல மடங்கு அதிகரித்து உள்ளது இங்கே. மேலும் இவர்கள் பிட்சை போட்ட அரசு இங்கு நடப்பதால் இவர்கள் ஆட்டம் பல மடங்கு அதிகமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X