சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி பக்கத்தில் 'பக்... பக்...'

Added : செப் 02, 2021
Share
Advertisement
அன்னுார்:வி.ஐ.பி., வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மாதம் 6ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். நீலகிரியில் இருந்து சாலை மார்க்கமாக அன்னுார் வழியாக, சூலுார் விமானப்படை தளத்துக்கு சென்றார். அவர் வருகைக்காக, அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி முன் இருந்த இரண்டு வேகத் தடைகள்
 பள்ளி பக்கத்தில் 'பக்... பக்...'

அன்னுார்:வி.ஐ.பி., வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மாதம் 6ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். நீலகிரியில் இருந்து சாலை மார்க்கமாக அன்னுார் வழியாக, சூலுார் விமானப்படை தளத்துக்கு சென்றார். அவர் வருகைக்காக, அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி முன் இருந்த இரண்டு வேகத் தடைகள் அகற்றப்பட்டன. நாகமாபுதுார் மற்றும் சோமனுார் பிரிவிலுள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன. வி.ஐ.பி., வந்து சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும், மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை.இதுகுறித்து அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் செய்து விட்டோம். கடந்த 1ம் தேதி முதல், பள்ளி துவங்கி, 9 முதல் 12 வரை வகுப்புகள் நடக்கின்றன. 700 மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருகின்றனர். மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசியில் இருந்து வேகமாக வரும் வாகனங்களால் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.சோமனுார் பிரிவில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் கனரக வாகனங்கள் அதிகமாக வருகின்றன. அங்கே பல விபத்துகள் நடந்ததால் வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது அவை அகற்றப்பட்டதால், கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் திரும்புகின்றன. மீண்டும் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் உடனே அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X