பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் முறையிட்ட இந்து முன்னணி தொண்டர்கள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்ததை கண்டித்து, இந்து முன்னணியினர் நேற்று கோவில்களில் முறையீடுசெய்தனர்.கொரோனா பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், தமிழக அரசு தடை விதித்துள்ளது.வீடுகளில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்கலாம். தனிப்பட்ட முறையில் விநாயகர் சிலைகளை கொண்டு சென்று நீர் நிலைகளில்
கோவில்களில் முறையிட்ட இந்து முன்னணி தொண்டர்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்ததை கண்டித்து, இந்து முன்னணியினர் நேற்று கோவில்களில் முறையீடுசெய்தனர்.கொரோனா பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், தமிழக அரசு தடை விதித்துள்ளது.வீடுகளில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்கலாம். தனிப்பட்ட முறையில் விநாயகர் சிலைகளை கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கலாம் என அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்ததை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் கோவில்களில் முறையிடும் போராட்டம் நேற்று நடந்தது. அன்னுார் பாத விநாயகர் கோவிலில், மாவட்ட செயலாளர் குட்டி தலைமையில், இந்து முன்னணியினர் இறைவனை வேண்டி முறையிட்டனர்.டாஸ்மாக் கடைகள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, 50 பேர் செல்ல வேண்டிய பஸ்களில், 75 பேர் பயணிக்கின்றனர்.அரசு விழாக்கள் தெருக்களில் நடக்கிறது. பெரிய வணிக வளாகங்கள், மார்க்கெட்டில் பல நுாறு பேர் கூடுகின்றனர்.

பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன. ஆனால் பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய தடை செய்வது ஏன்? என்று கோஷம் எழுப்பினர்.கஞ்சப்பள்ளி, தேனீஸ்வரர் கோவிலில், வடக்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் தலைமையிலும், எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவிலில், தெற்கு ஒன்றிய தலைவர் மாரப்பன் தலைமையிலும், இறைவனிடம் முறையிடும் போராட்டம் நடந்தது. நகரத் தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம் இந்து முன்னணி கிழக்கு நகர் சார்பில், சேரன் நகர் செல்லும் வழியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடை நீங்க, நிர்வாகிகள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில், துணை தலைவர் காளியப்பன், பொது செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பாலாஜி, சுரேஷ்குமார் மற்றும் இந்து இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வடக்கு நகர் இந்து முன்னணியினர், தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில், மாநில துணை தலைவர் தங்கவேல், பொறுப்பாளர்கள் தேவன், தனபால்,சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.* கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் முருகப்பெருமானிடம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு முறையிட்டனர். கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், வாழைத்தோட்டம் அய்யன் கோவில் முன் போராட்டம் நடத்தப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், கவுண்டம்பாளையம்,துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களின் முன், விநாயகர்சதுர்த்தி விழாவுக்கு,தமிழக அரசு தடை விதித்ததை கண்டித்து,இந்து முன்னணியினர் கோவில்களில் இறைவனிடம் முறையீடு செய்து வழிபடும் நிகழ்ச்சிநடந்தது. -நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X