பொது செய்தி

தமிழ்நாடு

நிலவுது குடிநீர் பிரச்னை ;கருணை காட்டுங்களேன்!

Added : செப் 02, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:தொட்டிபாளையத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க, குடிநீர் தொட்டி கட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கரவளி மாதப்பூர் ஊராட்சி. தொட்டிபாளையம், ராமாட்சியம்பாளையம் உட்பட குக்கிராமங்கள் உள்ளன. தொட்டிபாளையம் கிராமத்தை ஒட்டி ஆதிதிராவிடர் காலனி, கொங்கு நகர், நிறைவானந்தம் சிட்டி உட்பட பகுதிகள் உள்ளன. 6,000த்துக்கும் மேற்பட்ட

கருமத்தம்பட்டி:தொட்டிபாளையத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க, குடிநீர் தொட்டி கட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கரவளி மாதப்பூர் ஊராட்சி. தொட்டிபாளையம், ராமாட்சியம்பாளையம் உட்பட குக்கிராமங்கள் உள்ளன. தொட்டிபாளையம் கிராமத்தை ஒட்டி ஆதிதிராவிடர் காலனி, கொங்கு நகர், நிறைவானந்தம் சிட்டி உட்பட பகுதிகள் உள்ளன. 6,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல்அவதிக்குள்ளாகி உள்ளனர்.தொட்டிபாளையம் மக்கள் கூறியதாவது:நான்கு பகுதிகளில், 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. அதுவும் போதியளவு இல்லை. இதனால், நாங்கள் அவதிக்குள்ளாகி உள்ளோம். தொட்டிபாளையம் பகுதிக்கென தனியாக, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்மட்ட தொட்டி கட்ட வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் உட்பட அனைவருக்கும் மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X