வாழை, மரவள்ளிக்கு காப்பீடு செய்ய அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழை, மரவள்ளிக்கு காப்பீடு செய்ய அழைப்பு

Added : செப் 02, 2021
Share
அன்னுார்:வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு, காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.சர்க்கார் சாமக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அனிஷா வெளியிட்டுள்ள அறிக்கை:'பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா' திட்டத்தின் வாயிலாக, கன மழை, வறட்சி, வெள்ளம், பூச்சி நோய் தாக்குதல் ஆகியவற்றால் வாழை மற்றும் பயிர்கள் சேதம் அடைந்தால், காப்பீடு

அன்னுார்:வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு, காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.சர்க்கார் சாமக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அனிஷா வெளியிட்டுள்ள அறிக்கை:'பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா' திட்டத்தின் வாயிலாக, கன மழை, வறட்சி, வெள்ளம், பூச்சி நோய் தாக்குதல் ஆகியவற்றால் வாழை மற்றும் பயிர்கள் சேதம் அடைந்தால், காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீடு தொகை பெறலாம்.வெள்ளக்கிணறு, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி, கொண்டையம்பாளையம், கீரணத்தம், அக்ரஹார சாமக்குளம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளமடை வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வாழைக்கு, ஏக்கருக்கு, 4,586 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.கொண்டையம்பாளையம், கீரணத்தம், அக்ரஹார சாமக்குளம் கள்ளிப்பாளையம், வெள்ளமடை, வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள், மரவள்ளிக்கு ஏக்கருக்கு, 1,610 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். விபரங்களுக்கு, 95248 23302, 90926 21316 மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X