பொது செய்தி

தமிழ்நாடு

2 நாள் டைம் குடுத்துருக்காங்க... பாக்கலாம்...! மறியலுக்கு பின் காத்திருக்கும் மக்கள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;ஒதுக்கீடு செய்த அளவைவிட குறைவான தண்ணீர் பம்பிங் செய்வதை கண்டித்து, ஊராட்சி தலைவர் மற்றும் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.சிறுமுகை அடுத்த சம்பரவள்ளி அருகே கோவில்மேட்டில், ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து சின்னகள்ளிபட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம்,

மேட்டுப்பாளையம்;ஒதுக்கீடு செய்த அளவைவிட குறைவான தண்ணீர் பம்பிங் செய்வதை கண்டித்து, ஊராட்சி தலைவர் மற்றும் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.சிறுமுகை அடுத்த சம்பரவள்ளி அருகே கோவில்மேட்டில், ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து சின்னகள்ளிபட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம், ஜடையம்பாளையம், சிக்கதாசம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு, மக்கள் தொகை அடிப்படையில், தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. இந்த நீரை அனைத்து கிராமங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.முடுதுறை ஊராட்சியில், 18 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த நீரின் அளவு குறைக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்த அளவு குடிநீரை வழங்கக்கோரி, முடுதுறை ஊராட்சி தலைவர் ராஜா தலைமையில், துணைத் தலைவர் ஜோதிமணி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் என, 100க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் சாலையில், கோவில்மேடு முன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சிறுமுகை எஸ்.ஐ., ராஜபிரபு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி, சீராக குடிநீர் வழங்க உத்தரவாதம் வழங்கியதால், மறியலை கைவிட்டனர். ஊராட்சி தலைவர் ராஜா கூறியதாவது:காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முடுதுறை ஊராட்சிக்கு, நாளொன்றுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து, 3 லட்சத்து, 32 ஆயிரம் லிட்டர் நீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நீரை வைத்து, ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதமாக நாளொன்றுக்கு, இரண்டு லட்சத்து, 59 ஆயிரம் லிட்டர் மட்டுமே குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. இந்த நீரை, ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்யும் பொழுது, நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. போதிய குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அதனால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அளவை, மீண்டும் வழங்கக் கோரி மறியல் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் அதிகாரிகள் சீர் செய்வதாக கூறியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X