பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து முன்னணி சார்பில் மனு கொடுக்கும் வேண்டுதல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்:விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்த தி.மு.க., அரசுக்கு நல்ல புத்தி அளிக்க கோரி, ஹிந்து முன்னணியினர் மனு கொடுக்கும் வேண்டுதல் நடத்தினர்.சென்னை திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில் நேற்று காலை ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்த தி.மு.க., அரசிற்கு நல்ல புத்தி அளிக்க கோரி, மனு கொடுக்கும் வேண்டுதல் நடந்தது.இதில்,
 ஹிந்து முன்னணி சார்பில்  மனு கொடுக்கும் வேண்டுதல்

திருவொற்றியூர்:விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்த தி.மு.க., அரசுக்கு நல்ல புத்தி அளிக்க கோரி, ஹிந்து முன்னணியினர் மனு கொடுக்கும் வேண்டுதல் நடத்தினர்.

சென்னை திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில் நேற்று காலை ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்த தி.மு.க., அரசிற்கு நல்ல புத்தி அளிக்க கோரி, மனு கொடுக்கும் வேண்டுதல் நடந்தது.இதில், ஹிந்து முன்னணி மாநில செயலர் மனோகர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு ஒன்றை எழுதி, அம்மன் சன்னிதியில் சமர்ப்பித்தனர். பின், கோவில் கோபுரம் முன் கூடி, விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து மனோகர் கூறியதாவது:மாற்று மத ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கு அனுமதி கொடுத்திருக்கும் தி.மு.க., அரசு, விநாயகர் ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி மறுப்பதற்கான காரணம் தெரியவில்லை.இது மதச்சார்பற்ற நாடு. மதங்களை கடந்தவராக முதல்வர் இருக்க வேண்டும்; அனைத்து மதத்தவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். எனவே, தி.மு.க., அரசிற்கு நல்ல புத்தி வழங்கக் கோரி, மனு கொடுக்கும் வேண்டுதல் நடத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X