பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால் 'சரக்கு' : ஊட்டி கலெக்டர் அறிவிப்பு

Updated : செப் 03, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (23+ 3)
Share
Advertisement
ஊட்டி :கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே, நீலகிரி மாவட்டத்தில் இனிமேல், 'சரக்கு' கிடைக்கும். தொற்று தடுப்பு நடவடிக்கையை அலட்சியப்படுத்தும், 'குடி'மகன்களுக்கு சூடு வைக்கும் விதமாக, 'தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடைகளில் மது வகைகள் வழங்கப்படும்' என, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா அறிவித்து இருக்கிறார். இந்த அதிரடி உத்தரவு,
தடுப்பூசி , சரக்கு ,ஊட்டி கலெக்டர் அறிவிப்பு

ஊட்டி :கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே, நீலகிரி மாவட்டத்தில் இனிமேல், 'சரக்கு' கிடைக்கும். தொற்று தடுப்பு நடவடிக்கையை அலட்சியப்படுத்தும், 'குடி'மகன்களுக்கு சூடு வைக்கும் விதமாக, 'தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடைகளில் மது வகைகள் வழங்கப்படும்' என, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா அறிவித்து இருக்கிறார். இந்த அதிரடி உத்தரவு, மற்ற மாவட்டங்களிலும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, 'மது கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும்' என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, டாஸ்மாக் வெளியிட்டுள்ளது.


தொற்று பரவும் அபாயம்



மது வாங்க வருவோர் அதை கடைப்பிடிப்பதில்லை; கடை விற்பனையாளர்களும் கண்டு கொள்வதில்லை. இதனால், கடைகளில் ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது.
ஆய்வுக்கு செல்லும் சமயங்களில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் பின்பற்றப்படுகிறதே தவிர, அனைத்து நாட்களிலும் முழுதுமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால், பலரும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தபடி உள்ளனர். இதனால், அங்குள்ள மது கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் கூடுவதால், தொற்று பரவும் அபாயம்ஏற்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தோட்டக்கலை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா மையங்களில், பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனா பரவலை தடுக்க, சுகாதாரத் துறையினர் பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த மாவட்டத்தில் இதுவரை, 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திஉள்ளனர். இருப்பினும், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியரால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதை தடுக்கும் பணியில், மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி, 'டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே, மது வகைகள் வழங்கப்படும்' என, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.


75 மது கடைகள்



இது தொடர்பாக, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் 75 மது கடைகள் செயல்படுகின்றன. ''மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, மது வாங்க வருவோர் கண்டிப்பாக, முதல் தவணை கொரோனா தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும்; அதற்கான எஸ்.எம்.எஸ்., தகவல் அல்லது சான்று காட்டி, மது பாட்டில்களை வாங்கிச் செல்லலாம்,'' என்றார்.இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மது கடை ஊழியர்களுக்கு, நிர்வாகம் தரப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 'மது கடைகளில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு, மது வாங்க வருவோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மற்ற மாவட்டங்களில், அந்தந்த கலெக்டர் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என்றார்.


உயர் நீதிமன்ற உத்தரவால் கேரளாவில் குறைந்த கூட்டம்



கொரோனா தொற்றைக் குறைக்க, தமிழக அரசு பல வழிகளில் முயன்று வரும் வேளையில், நீலகிரி கலெக்டரின் அறிவிப்பு, அனைவரையும் ஈர்த்துள்ளது. அது போல, கேரளாவிலும் கொரோனா பரவலைத் தடுக்கும் விவகாரத்தில், உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கேரளாவில், 'பெவ்கோ' என்ற பொதுத் துறை நிறுவனம் வாயிலாக மது விற்பனை நடத்தப்படுகிறது. அருகில் அமைந்துள்ள மது கடைகளால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, திருச்சூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

அதைத் தொடர்ந்து, மது கடைகளில் உரிய வசதிகள் ஏற்படுத்தவும், அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க, சில கடைகளை வேறு இடத்துக்கு மாற்றவும் கேரள உயர் நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.இது தொடர்பாக பெவ்கோ நிறுவனத்துக்கு, மாநில கலால் துறை சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படாதது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், தன் புதிய உத்தரவில் கூறியுள்ளதாவது:மது கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது தொடர்பான விவகாரத்தில் இந்த நீதிமன்றம் தலையிட்டதால், தற்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும், சில கடைகளில் மக்கள் அதிக அளவில் காத்திருக்கின்றனர்.

மாநிலத்தில் அதிக வருவாயை ஈட்டித் தரும் துறையாக நீங்கள் இருக்கலாம். அதனால், நீங்கள் தான் சிறந்தவர்கள் என கூற முடியாது. அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் மிகப் பெரிய அணுகுண்டு மீது கேரளா அமர்ந்திருந்தது. தற்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மூன்றாவது அலை இன்னும் ஏற்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அரசின் கலால் துறை உத்தரவின்படி, போதிய வசதிகள் இல்லாத கடைகளை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
03-செப்-202123:28:29 IST Report Abuse
Mohan தடுப்பூசி போட்டால்தான் சரக்கு என்று என்றிருக்க வேண்டும். இல்லையேல் அர்த்தம் மாறும்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
03-செப்-202120:35:35 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இவரைப்போன்றவர்கள் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக ஆகவேண்டும் பலிக்குமா என் ஆசை ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
03-செப்-202117:17:06 IST Report Abuse
DVRR சரக்குக்காக டாஸ்மாக் நாட்டு "குடி" மக்கள் என்ன என்ன என்ன வேண்டுமானாலும் செய்ய தயார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X