பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ரூ.200 கோடி பாக்கி உடனே வழங்க வலியுறுத்தல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சேலம்:ஊரடங்கால், 21 ஆயிரம் ஓட்டல்கள் நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வினியோகித்த உணவு தொகை, 200 கோடி ரூபாயை அரசு உடனே வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.1.05 லட்சம் ஓட்டல்கள்ஓட்டல் உரிமையாளர் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு, சேலத்தில் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவுக்கு முன், 1.05 லட்சம் ஓட்டல்கள் இயங்கின. கொரோனா முதல் அலையில், 5,000 ஓட்டல்கள் மூடப்பட்டன.

சேலம்:ஊரடங்கால், 21 ஆயிரம் ஓட்டல்கள் நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வினியோகித்த உணவு தொகை, 200 கோடி ரூபாயை அரசு உடனே வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


1.05 லட்சம் ஓட்டல்கள்

ஓட்டல் உரிமையாளர் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு, சேலத்தில் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவுக்கு முன், 1.05 லட்சம் ஓட்டல்கள் இயங்கின. கொரோனா முதல் அலையில், 5,000 ஓட்டல்கள் மூடப்பட்டன. இரண்டாம் அலையில், 16 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் உரிமையாளர்கள், அதில் பணிபுரிந்தவர்கள் வேலை இழந்து விட்டனர்.

தற்போது படிப்படியாக சகஜ நிலை திரும்புவதால், 84 ஆயிரம் ஓட்டல்கள் செயல்படுகின்றன. நகர் பகுதிகளில் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. அதேநேரம், சுற்றுலா தலங்களில் மட்டும் ஓட்டல் விற்பனை சூடுபிடிக்க துவங்கி உள்ளது.


நிதி நெருக்கடி

கொரோனா கண்டறிய பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஓட்டல், 'கேட்டரிங்'கில் இருந்து உணவு வினியோகிக்கப்பட்டது. தமிழகம் முழுதும், 37 மாவட்டங்கள், 12 மாநகராட்சி பகுதிகளில் வினியோகித்த உணவு தொகை, ஐந்து மாதங்களுக்கு, 200 கோடி ரூபாய் வரை உரிமையாளர்களுக்கு அரசு பாக்கி வைத்து உள்ளது.

இதனால், ஓட்டல்களுக்கு காய்கறி, பருப்பு, எண்ணெய், ஆடு, கோழி, மீன் வினியோகித்தவர்களுக்கும், ஓட்டல் வாடகை, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், உரிமையாளர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 200 கோடி ரூபாயை, அரசு உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X