கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் உத்தரவை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் என பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.பாலிசிவிபத்து வழக்கை விசாரித்த ஈரோடு தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி

சென்னை:புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் என பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

பாலிசிவிபத்து வழக்கை விசாரித்த ஈரோடு தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார்

ஈரோடு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, செப்., 1 முதல் புதிய வாகனங்களுக்கு, பம்பர் டூ பம்பர் காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கவும், ஓட்டுனர், பயணியர் என, அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு பாலிசி இருக்க வேண்டும் என்றும், நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் எஸ்.அருண்குமார் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவை பின்பற்ற, காப்பீட்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன. ''இவ்வழக்கில் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலை சேர்க்க வேண்டும். ''ஆணையத்தின் உரிய ஒப்புதல் பெற்ற பின், கணினியில் உரிய மாறுதல் செய்ய, 90 நாட்கள் அவகாசம் வேண்டும்,'' என்றார்.


நடவடிக்கை

அதைத்தொடர்ந்து, இவ்வழக்கில், ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர், போக்குவரத்து இணை கமிஷனர் ஆகியோரை வழக்கில் சேர்த்து பதில் அளிக்க, நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஏற்கனவே பிறப்பித்த உத்தரவையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில், ஓட்டுனர்கள், பயணியரின் நலன்களை பாதுகாக்கும் வகையில், உடனடியாக சுற்றறிக்கை பிறப்பித்த அரசின் நடவடிக்கைக்கும், நீதிபதி பாராட்டு தெரிவித்தார். விசாரணையை, 13ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X