பொது செய்தி

தமிழ்நாடு

ஓ.டி.டி., படங்களுக்கு தியேட்டர்கள் நிபந்தனை

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:ஓ.டி.டி., விவகாரத்தில், தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.கொரோனா தாக்கம் காரணமாக, தியேட்டர்களைத் தவிர்த்து, ஓ.டி.டி., தளங்களில் நேரடியாக புதிய படங்களை வெளியிடும் முறை உருவானது. மேலும், தொலைக்காட்சிகளிலும் புதிய படங்கள் வெளியாகத் துவங்கிஉள்ளன.மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, தலைவி படத்தை, தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில்,

சென்னை:ஓ.டி.டி., விவகாரத்தில், தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

கொரோனா தாக்கம் காரணமாக, தியேட்டர்களைத் தவிர்த்து, ஓ.டி.டி., தளங்களில் நேரடியாக புதிய படங்களை வெளியிடும் முறை உருவானது. மேலும், தொலைக்காட்சிகளிலும் புதிய படங்கள் வெளியாகத் துவங்கிஉள்ளன.மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, தலைவி படத்தை, தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில், ஓ.டி.டி., தளங்களில் வெளியிடுவதற்கான உரிமையை விற்றிருந்தனர்.

இந்த உடன்பாடு ஏற்கனவே கையெழுத்தாகி விட்டது. படத்தை தியேட்டர்களில் திரையிட அணுகிய போது, தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கான பேச்சு நடந்தது. இதில், நான்கு வாரத்திற்கு பின்னரே படத்தை, ஓ.டி.டி.,யில் வெளியிட முடிவானது. இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர். அதன்படி, ஓ.டி.டி.,யில் வெளியான படங்களை, தியேட்டர்களில் வெளியிட அனுமதிப்பதில்லை என்றும், ஓ.டி.டி.,யில் விற்கப்படும் படங்களுக்கு, 'பிரிவியூ' காட்சிகளுக்கு தியேட்டர்களை கொடுக்க மாட்டோம் என்றும் முடிவு எடுத்துஉள்ளதாக தெரிகிறது.

மேலும், ஓ.டி.டி.,க்காக தனியாக படங்களை தயாரித்து வெளியிடுவதில், எந்த ஆட்சேபனையும் தங்களுக்கு இல்லை என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X