கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பினாமி தடை சட்ட உத்தரவு ஐ.ஏ.எஸ்., வழக்கு தள்ளுபடி

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:முடக்கிய சொத்துக்களின் பயனாளியாக, வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாகராஜன் பதவி வகித்தார். 'நோட்டீஸ்'இவரது மனைவி சபிதாராணி பெயரில், வருமான வரித் துறை சோதனைக்கான, 'வாரன்ட்'

சென்னை:முடக்கிய சொத்துக்களின் பயனாளியாக, வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாகராஜன் பதவி வகித்தார்.


'நோட்டீஸ்'

இவரது மனைவி சபிதாராணி பெயரில், வருமான வரித் துறை சோதனைக்கான, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் 2016 நவம்பரில் சோதனை நடந்தது.சோதனையின் போது, தங்கம் மற்றும் 7.28 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், முடக்கி வைக்கப்பட்ட சொத்தின் பயனாளியாக நாகராஜனை காட்டி, பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் மனு தாக்கல் செய்தார். விளக்கம் கோரி, 'நோட்டீஸ்' அனுப்பாமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இயற்கை நீதி மீறப்பட்டதாகவும், யூகத்தின் அடிப்படையில் உத்தரவு இருப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ், சொத்துக்களை முடக்கி வைத்து, வருமான வரித் துறை உத்தரவிட்டு உள்ளது. மனுதாரர் தரப்பில், ஆவணங்களுடன் உரிய விளக்கங்களை அளிக்கலாம். நடைமுறைப்படி அதிகாரிகள் உரிய முடிவை எடுப்பர்.


ஆட்சேபனை

ஆரம்ப கட்டத்திலேயே, நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி உள்ளார்.மூன்று வாரங்களில் ஆட்சேபனைகளை மனுதாரர் தெரிவிக்கலாம். பிரச்னையை இழுத்தடிக்காமல், விசாரணை நடவடிக்கை முடிவதற்கு, மனுதாரர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X